அழகு மட்டும் இருந்தால் போதாது.. எனக்கு அப்படி நடிக்கத்தான் ஆசை.. ராஷி கன்னா பேட்டி!

சென்னை : சினிமாவில் நிலைத்து இருக்க அழகு மட்டும் இருந்தால் போதுமா என நடிகை ராஷி கன்னா பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இளம் நடிகையான ராஷி கன்னா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துக் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை ராஷி கன்னா

நடிகை ராஷி கன்னா

க்யூட் நடிகையான ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் ஆடியன்சுக்கு பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். தற்போது, இந்தியில் யோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஃபார்ஸி வெப் தொடர்

ஃபார்ஸி வெப் தொடர்

படங்களில் பிஸியாக நடித்து வரும்ர ராஷி கன்னா, தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில், ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ராஷி கன்னா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், பணம் மனிதனை எந்தளவுக்கு மோசடிக்காரர்களாக மாற்றுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. இந்த தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராஷி கன்னா, "ஃபார்ஸி தொடரில் மேகா வியாஸின் கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமந்தாவும் கீர்த்தி சுரேஷும் நன்றாக இருந்தது என்றார்கள். சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அழகு மட்டும் இருந்தால் போதுமா?

அழகு மட்டும் இருந்தால் போதுமா?

இதுவரை பல காதல் கதைகளிலும், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். இப்போது ஆக்‌ஷன் படம் பண்ண ஆசைப்படுகிறேன். பாகுபலியில் அனுஷ்கா இளவரசி போன்ற வேடத்தில் நடிக்க விரும்புகிறேன். அதே போல, நடிகைக்கு அழகு முக்கியம்தான். ஆனாலும் அழகை மட்டுமே நம்பி இருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது. ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து நிலைத்து இருப்பதற்கும், பட வாய்ப்புகளை அதிகமாக பெறுவதற்கும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது முக்கியம்.

வேறுமாதிரி பார்ப்பீர்கள்

வேறுமாதிரி பார்ப்பீர்கள்

இதுவரை நான் ஜாலியான ரோலில் நடித்து இருக்கிறேன். எனக்கும் அதுபோன்ற கதாபாத்திரங்கள் தான் வந்தன. ஆனால், நடிப்பு, திறமைக்கு சவால் விடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால் தான் நிலையான இடத்தில் இருக்க முடியும், இனிமேல் என்னை வேறுமாதிரி பார்ப்பீர்கள். சினிமாவும், ஓ.டி.டி படங்களும் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை என்று நடிகை ராஷி கன்னா பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X