வீட்ல கொஞ்சம் இடம் இருந்தாலும்.. இப்படி பண்ணுங்க.. ஆரோக்கியம் முக்கியம்.. சொல்றது யார் தெரியுமா?

சென்னை: கமலா கலாசான்னு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட வைத்து வரும் நடிகை ராஷி கண்ணா யோகா செய்யும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

செம பிசி

செம பிசி

பாலிவுட்டில் வெளியான மெட்ராஸ் கஃபே எனும் சர்ச்சை படத்தின் மூலம் அறிமுகமான ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு திரையுலகிலும் செம பிசி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அஜய் ஞான முத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

காப் ஸ்டோரி

காப் ஸ்டோரி

ராஷி கண்ணாவுக்கும் காப் ஸ்டோரிக்கும் அப்படி என்னத்தான் பொருத்தம் என்றே தெரியவில்லை. இமைக்கா நொடிகள் படம் தொடங்கி, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா என தொடர்ந்து காப் ஸ்டோரி படங்களிலேயே நடித்து வந்தார். சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் டிரெஸ் அணிந்து ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பார்.

ஆரோக்கியம் முக்கியம்

குவாரண்டின் காலத்தில் வீட்டில் இருந்தபடியே யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தாலும், இதுபோன்ற யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மறக்காமல் அனைவரும் செய்து நமது ஆரோக்கியத்தை காப்பது முக்கியம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். 4.7 மில்லியன் இன்ஸ்டா ரசிகர்களை கொண்ட ராஷ்மிகாவின் இந்த யோகா போட்டோவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் பொட்டு வருகின்றனர்.

யோகா பிரியை

நடிகை தமன்னாவை போல ராஷி கண்ணாவும் யோகா செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தலைக்கு மேலே கால்களை தூக்கி மடக்கி ஆலாசன செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு ராஷி கண்ணா வைரலாக்கி வருகிறார். இதற்கு முன்னதாகவும், தனது பால்கனியில் யோகா செய்யும் புகைப்படத்தை நடிகை ராஷி கண்னா பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X