Rashi khanna: உடனடியாக ஓகே சொல்லிட்டேன்.. அரண்மனை 4 ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ராஷி கண்ணா!

ஐதராபாத்: நடிகர் சுந்தர் சியின் அடுத்தடுத்த படங்கள் சிறப்பான கவனத்தை பெற்ற போதிலும் அரண்மனை படங்கள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த சூழலில் மூன்றாவது பாகம் நினைத்த அளவிற்கு ரசிகர்களை கவர தவறியது. ஆயினும் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் நான்காவது பாகத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி.

இந்த படத்தில் சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் படம் வரும் மே 3ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் ஐதராபாத்தில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Actress Rashi Khanna shared interesting things about Aranmanai 4 movie in Pre release function

அரண்மனை 4 படம்: நடிகர் சுந்தர் சி, தமன்னா, யோகி பாபு, ராஷி கண்ணா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அரண்மனை 4 படம் வரும் மே 3ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தற்போது நான்காவது பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த சூழலில் கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். இதை அடுத்து தானே ஹீரோவாக களமிறங்கினார் சுந்தர்சி.

ஹீரோவாக சுந்தர் சி: அவருக்கு ஜோடியாக படத்தில் ராஷி கண்ணா இணைந்துள்ளார். இந்தப் படத்தை இயக்கி தானே நடித்துள்ள சுந்தர் சி, தன்னுடைய மனைவி குஷ்பூவுடன் இணைந்து தயாரித்தும் உள்ளார். முன்னதாக இந்த படம் ஜனவரி மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக அடுத்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது மே 3ம் தேதிக்கு இந்த படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது. படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளதால் அதற்கான ப்ரோமோஷன்களில் தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் பல சுவாரசியங்களை அவர்கள் இந்த பிரமோஷன்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி: அந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தமன்னா, ஹோம்லியாக சேலை அணிந்து வந்து கலந்து கொண்டார். ஆனால் ராஷி கண்ணா கவர்ச்சியான உடையில் வந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஷி கண்ணா, அரண்மனை 4 படத்தில் தான் எப்படியாவது இணைய வேண்டும் என்று நினைத்ததாகவும் அதனால் கதை உள்ளிட்ட எது குறித்தும் தான் பேசவில்லை என்றும் உடனடியாக படத்தில் நடிக்க ஓகே சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும் படம் சிறப்பான கோடைக் கொண்டாட்டமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Actress Rashi Khanna shared interesting things about Aranmanai 4 movie in Pre release function

ஹோம்லியாக நடித்துள்ள தமன்னா: இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்புவும் க்யூட்டான கெட்டப்பில் பங்கேற்றிருந்தார். படம் இன்னும் நான்கு தினங்களில் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆயினும் முந்தைய படங்களின் சாயல் இந்தப் படத்திலும் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதுவாக இருந்த போதிலும் படம் ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும். இந்த படத்தில் சுந்தர் சியின் தங்கையாக மர்மமான முறையில் மரணம் அடைந்தவராக தமன்னா நடித்துள்ளார். படத்தில் அவர் ஹோம்லியாக நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X