'தளபதி 66'க்கு ரெடியான ராஷ்மிகா.. விஜய்யை இம்ப்ரஸ் செய்ய புது முயற்சி !
சென்னை : ஹலமத்தி ஹபிபோ... ஹலமத்தி ஹபிபோ... இந்த அரபிக்குத்து பாட்டுக்கு சீரியல் நடிகை ஆடுனாலே வெச்சகண்ணு வாங்காம பார்ப்போம்.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா ஆடுனா சும்மா இருப்போமா, இந்த பாட்டுக்கு வேறலெவலில் ஆட்டம் போட்டு இருக்காங்க நம்ம ராஷ்மிகா.
ராஷ்மிகா தனியாக ஆடாமல் கூட ஆடிய நடிகரை பார்த்து, அவரது ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர்.

பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அரபிக்குத்து
இந்த படத்தில் இடம்பெற்ற அரபிகுத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இளசுகள் முதல் பெரிசுகள் இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டு வருகின்றனர். இவர்களை போல பிரபல பல நடிகர்கள், நடிகைகள் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

150 மில்லியனை தாண்டியது
இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம ஆட்டம்
இந்நிலையில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் வருண் தவான் உடன் கடற்கரையில் அரபிக்குத்து குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தளபதி 66
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா என்பது தெரியவந்துள்ளதால், விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா அவரை இம்பிரஸ் செய்யும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். விஜய் 66 திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











