Rashmika Mandanna - ஆம் அது ரொம்பவே உண்மை.. விஜய் தேவரகொண்டாவுடன் காதல்?.. உறுதி செய்த ராஷ்மிகா மந்தனா?
பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை அள்ளியது. வணிக ரீதியாக படம் வெற்றி பெற்றதை அடுத்து ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஹிந்தி தவிர்த்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அவர்.
கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அங்கு ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கில் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தவருக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. அதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. முக்கியமாக அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து ஆண் ரசிகர்களின் க்ரஷ்ஷாக மாறினார் ராஷ்மிகா.

தமிழில் ராஷ்மிகா: தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் அவர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதனையடுத்து தமிழிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். முதல் தமிழ் படம்தான் கைவிட்டது; இரண்டாவது படம் விஜய்யுடன் நடிப்பதால் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டிருந்தார். ஆனால் அவரது கணக்கை பொய்யாக்கும் விதமாக வாரிசு படமும் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து தமிழில் ரெயின்போ படத்தில் நடிப்பதற்கு இப்போது கமிட்டாகியிருக்கிறார்.
நேஷனல் க்ரஷ்: தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்திருக்கும் அவர் கடைசியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்த அப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அனிமல் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் ராஷ்மிகா மந்தனா ஏகப்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். படம் விமர்சனங்களை சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு அடுத்ததடுத்த ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் அவரை நேஷனல் க்ரஷ் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர்.
விஜய்யுடன் காதல்: இதற்கிடையே ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக ஒரு தகவல் கடந்த சில காலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதனை இரண்டு பேருமே வெளிப்படையாக ஏற்கவும், மறுக்கவும் இல்லை. முக்கியமாக இரண்டு பேரும் அடிக்கடி வெளிநாட்டுக்கு ட்ரிப் அடிப்பதாகவும்; ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் காட்டுத்தீயாக பரவியது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்துக்கொண்டாரா ராஷ்மிகா: இந்நிலையில் ட்விட்டரில் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா மந்தனாவின் கணவராக வருவதற்கு என்னென்ன தகுதி வேண்டும். அவர் நேஷனல் க்ரஷ் என்பதால் கணவர் ஸ்பெஷலாக இருக்க வேண்டும். அவரது கணவர் VDயாக இருக்க வேண்டும். அதாவது Very Daring (ரொம்ப தைரியசாலி) நபராக இருக்க வேண்டும். அவரை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, 'ஆம் அது ரொம்பவே உண்மை'என்று கூறி சிரிக்கும் எமோஜியையும், ஹார்ட் எமோஜியையும் பகிர்ந்திருந்தார்.
அந்த ரசிகர் VD என்பதற்கு விஜய் தேவரகொண்டா என்ற பொருள் இருப்பதையும் தனது ட்வீட்டில் உணர்த்தியிருக்கிறார். அதனை புரிந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா ஆம் அது உண்மை என்று கூறியிருப்பதன் மூலம் விஜய் தேவரகொண்டாவுடனான தனது காதலை மறைமுகமாக ஒத்துக்கொண்டிருக்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸை பறக்கவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











