அரைகுறை உடையில்.. கடற்கரையில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் பிரபல நடிகை.. பகீர் கிளப்பும் வீடியோ!
சென்னை: பிரபல நடிகை கடற்கரையில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்து மிரட்டியுள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் பெரும் ஹிட்டானது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என்ற கிசுகிசுவிலும் சிக்கினார் ராஷ்மிகா மந்தனா.

கார்த்தியுடன்..
தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பில்லோ கவர்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதோடு ரசிகர்களிடம் லைவில் சாட் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் ரசிகர்களிடம் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் ஹோட்டல் அறையில் இருந்த பில்லோ கவரை திருடியதை வெளிப்படையாக கூறினார்.

கோவாவில் ஓய்வு
மேலும் பிரியாணியில் ரசத்தை கலந்துக்கட்டி அடிப்பேன் என்று தனது உணவு முறை காம்பினேஷனை கூறி தலைசுற்ற வைத்தார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவாவில் ஓய்வை கழித்து வருகிறார் ராஷ்மிகா.
View this post on InstagramA post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on
தீவிர உடற்பயிற்சி
தனது நெருங்கிய நண்பர்களுடன் கோவா சென்றுள்ள அவர், அங்கு இயற்கை அழகை ரசிப்பதோடு மட்டுமின்றி தீவிர உடற் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கோவா கடற்கரையில் ஆண்களுக்கு நிகராக படு வேகமாக பயிற்சி செய்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

அலையின் சத்தம்
மேலும் முதல் முறையாக பீச்சில் தான் வொர்க் அவுட் செய்வதாகவும், இதற்கு தான் அடிமை ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். அலையின் சத்தமும், கடலின் வாசனையும், சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும், கடல் மணலில் தன்னுடைய பாதம் படுவதும் ரொம்பவே அழகு என்றும் கூறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

பலரும் பாராட்டு
ராஷ்மிகாவின் இந்த வீடியோவை இதுவைர சுமார் 20 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஏராளமான ரசிகர்கள் அவரது உடற் பயிற்சியின் தீவிரத்தை பார்த்து வாவ் என வாயை பிளந்துள்ளனர். பலரும் ராஷ்மிகாவை பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











