அவர காதலிக்கனும்.. இவர கல்யாணம் பண்ணிக்கனும்.. திருமணமான நடிகருக்கு ரூட்டுவிடும் பிரபல நடிகை!
சென்னை: நடிகை ரித்விகாவை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை திருமணமான நடிகருடன் செட்டிலாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நடிகைகள் தங்களின் க்ரஷ் குறித்தும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்கள் குறித்தும் வெட்ட வெளிச்சமாக பேசி வருகின்றனர். நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருப்பதாக கூறினார்.
அவரை தொடர்ந்து நடிகை ரித்விகா, விஜய் சேதுபதி மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறினார். அவரையும் தாண்டி ஒரு படி மேலே போன ரைஸா, ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் போவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

நொந்து போகும் ரசிகர்கள்
நடிகைகளின் இதுபோன்ற அதிரடி பதில்களால் திக்குமுக்காடிப் போன ரசிகர்கள் என்ன இந்த நடிகைகள் இப்படி கிளம்பிவிட்டார்கள் என நொந்துக் கொண்டனர்.

மூன்று ரோஜாக்கள்
இந்நிலையில் அண்மையில் தனியார் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவரிடம் மூன்று ரோஜாக்கள் கொடுக்கப்பட்டு நட்பு, காதல், திருமணம் என்ற அடிப்படையில் மூன்று பேருக்கு வழங்க வேண்டும். அதனை யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.

இவருடன் திருமணம்
அதற்கு ராஷ்மிகா நட்பை குறிக்கும் ரோஜாவை விஜய் தேவரகொண்டாவுக்கும், காதலை குறிக்கும் ரோஜாவை விஜய் சேதுபதிக்குக்கும் கொடுப்பேன் என்றார். மேலும் திருமணத்தைக் குறிக்கும் ரோஜாவை நடிகர் விஜய்க்கு கொடுப்பேன் என்று கூறி பட்டையை கிளப்பினார்.

இவருக்கும் அவர் மீது கண்
நடிகர் விஜய்க்கு ஏற்கனவே திருமணமாகி, ஹீரோவாக நடிக்கும் வயதில் ஒரு மகன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ரசிகைகளின் ஆதரவு குறைந்தபாடில்லை. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் மீது ஒரு கண் வைத்துள்ளார்.

கார்த்தியுடன்
நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெறவே மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











