சொல்லணும்னு தோணுச்சு.. ரசிகர்களுக்கு ராஷ்மிகா சொன்ன அட்வைஸ்!

மும்பை : நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

புஷ்பா வெற்றியை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது சீதா ராமம் படம் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது.

அடுத்ததாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா

மிகவும் ராசியான நடிகையாக மாறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்து வெளியான புஷ்பா படம் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் துவங்கவுள்ளது.

சீதா ராமம் படம்

சீதா ராமம் படம்

இந்நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்து இரு தினங்களுக்கு முன்பு சீதா ராமம் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 3 நாட்களிலேயே மிரட்டலான வசூலை சர்வதேச அளவில் கொடுத்துள்ளது. கடந்த 3 நாட்களிலேயே சர்வதேச அளவில் 22 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் ஈட்டியுள்ளது.

அதிகரித்த மார்க்கெட் வேல்யூ

அதிகரித்த மார்க்கெட் வேல்யூ

இந்த இரண்டு படங்களும் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ள நிலையில், ராஷ்மிகாவின் மார்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. தமிழிலும் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. புஷ்பா, சீதா ராமம் படங்கள் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் வாரிசு படமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

பான் இந்தியா ஸ்டார்

பான் இந்தியா ஸ்டார்

இதையடுத்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் ராஷ்மிகா. தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ள நிலையில் இவரது சம்பளமும் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ராஷ்மிகா.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

ரசிகர்களுக்கு அட்வைஸ்

அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு சிறப்பான அக்கறையுடன் கூடிய மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கேர்புல்லாக இருக்க வலியுறுத்தல்

கேர்புல்லாக இருக்க வலியுறுத்தல்

வழக்கமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் சொல்ல வேண்டும் என்ற தோன்றியதாக ராஷ்மிகா தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த மழைக்காலத்தில் இரவு நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்லும்போதும், அலுவலகத்தில் இருந்து திரும்பும் போதும் ப்ளீஸ், ப்ளீஸ் மிகவும் கேர்புல்லாக இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் மீது அக்கறை

ரசிகர்கள் மீது அக்கறை

நடிகையாக இருந்த போதிலும் தன்னுடைய ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு இத்தகைய பதிவை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கண்டிப்பாக செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வாரிசு படத்தின் அப்டேட்டை அவரிடம் கேட்க தவறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X