விஜய் தேவரகொண்டா வீட்டில் ராஷ்மிகா என்ன பண்றாரு பாருங்க.. ஓஹோ இப்பவே தல தீபாவளியா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக குபேரா படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. தெலுங்கிலும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா இந்த படம் அடுத்த மாதத்தில் ரிலீஸ் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனாவும் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டத்தை அவர் தனது காதலராக கூறப்படும் விஜய் தேவரகொண்டாவுடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். தன்னுடைய தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

rashmika mandanna vijay devarakonda

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ். தெலுங்கு. ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அடுத்த மாதம் புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது கேரக்டர் அல்லு அர்ஜுனின் மனைவியாக மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக தமிழில் குபேரா படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதனிடையே, ராஷ்மிகா நீண்ட காலங்களாகவே விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா டேட்டிங்: இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றினாலும் இந்த தகவலை உறுதிப்படுத்தாமலேயே இருந்து வருகின்றனர் இந்நிலையில் தீபாவளி உள்ளிட்ட கொண்டாட்டங்களை அவர் அடுத்தடுத்து விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் நேற்றைய தினமும் தீபாவளியை அவர் தன்னுடைய காதலர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் மற்றும் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா எடுத்ததாக தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டம்: இந்த புகைப்படங்களில் மாஸாக ராஷ்மிகா மந்தனா காணப்படுகிறார். கைகளில் விளக்குகளை பிடித்த படியும் பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். அவரது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. ராஷ்மிகா மந்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பமாக காணப்படுகிறது. அதற்கு ஏற்பவே இவர்கள் அடுத்தடுத்து புகைப்படங்களையும் விடுமுறை கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி போன்ற மிகச் சிறப்பான பெஸ்டிவலை தன்னுடைய காதலரான விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா கொண்டாடியுள்ளது மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

கொண்டாட்ட புகைப்படங்கள்: ஆனாலும் தனியாக இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். பெஸ்டிவல் மூடுக்கான அழகான லுக்கில் இந்த புகைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா காணப்படுகிறார். அடுத்தடுத்து பாலிவுட்டில் சல்மான் கானுடன் சிக்கந்தர், விக்கி கவுஷல் இயக்கத்தில் சாவா என பிசியாகியுள்ளார் ராஷ்மிகா. இதனிடையே ஸ்ட்ரீ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் அடுத்ததாக தாமா என்ற படத்திலும் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

rashmika mandanna vijay devarakonda

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X