Rashmika: ராஷ்மிகா பிறந்தநாள் ஸ்பெஷல்.. ஸ்ரீவள்ளியின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட புஷ்பா 2 டீம்!

சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தொடர்ந்து தெலுங்குப் படங்களில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இதையடுத்து கடத்ந ஆண்டில் தமிழில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா.

புஷ்பா உள்ளிட்ட ராஷ்மிகாவின் படங்கள் இந்திய அளவில் மிக அதிகமான வரவேற்பை ராஷ்மிகாவிற்கு பெற்றுத் தந்துள்ளது. பான் இந்தியா நாயகியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும ராஷ்மிகா, இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களின் மூலமாகவும் நேரிலும் அதிகமான ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புஷ்பா 2 டீம் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. மேலும் ராஷ்மிகாவின் க்யூட்டான போஸ்டரும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

Actress rashmika mandanna celebrates her birthday today

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்த இவர், கடந்த ஆண்டில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார். வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ராஷ்மிகாவின் நடிப்பு மற்றும் டான்ஸ் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கி வருகிறார்.

புஷ்பா 2 படம்: முன்னதாக வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 300 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் இந்த வரவேற்பை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

ராஷ்மிகா பிறந்தநாள் போஸ்டர்: இன்றைய தினம் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும் நேரிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா 2 படக்குழுவினர் ராஷ்மிகா மந்தனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து புஷ்பா 2 படத்தில் அவரது க்யூட்டான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் லுக் தற்போது வெளிப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் சாமி பாடலுக்கு க்யூட் நடனத்தை பரிசளித்திருந்தார் ராஷ்மிகா. இந்நிலையில் தற்போது 2வது பாகத்தில் அவர் தனியாக ஆட்டம் போட்டுள்ளாரா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்?: சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக உள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து முன்னதாக தங்களது விடுமுறையை வெளிநாட்டில் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் இநத் ஜோடி இணைந்து நடித்திருந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடனும் ராஷ்மிகா மந்தனா, அவ்வப்போது நேரத்தை செலவழித்து வருகிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இவர்களது காதல் உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X