நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தானா… இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் ஃபாலோவர்ஸ்!

சென்னை : துறு துறுப்பான பார்வை... பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் அழகு... என திரைத்துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே இளம் நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தானா.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil

இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டி உள்ளது.

இதனால், தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோவர்களை கொண்ட நடிகை என பெயர் எடுத்துள்ளார் ராஷ்மிகா.

ராஷ்மிகா அறிமுகம்

ராஷ்மிகா அறிமுகம்

2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

பிளாக் பஸ்டர் ஹிட்

பிளாக் பஸ்டர் ஹிட்

இளம் ரசிகைகளின் கனவு நாயகனான விஜய் தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து இவர்கள் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு போனது. அந்த திரைப்படத்தில் ராஷ்மிகாவின் சிறு சிறு அசைவுகளையும் அவரது ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து உச்சுகொட்டினர்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

மேலும், தெலுங்கு முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். இவர், எப்போது தமிழ் திரையில் அறிமுகமாவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரபிரசாதமாக அமைந்தது.

நடிக்க வாய்ப்பு

நடிக்க வாய்ப்பு

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜை ஹெக்டே நடித்து வருகிறார். அதேபோல விஜய் அடுத்தாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில் ராஷ்மிகா நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

19 மில்லியன் ஃபாலோவர்ஸ்

19 மில்லியன் ஃபாலோவர்ஸ்

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 19 மில்லியனைத் தாண்டி உள்ளது. இதனால், தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோவர்களை கொண்ட நடிகை என பெயர் எடுத்துள்ளார். அதிக ஃபாலோவர்களை கொண்ட நடிகையாக இருந்த காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங்,சுருதி ஹாசன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி உள்ளார் ராஷ்மிகா.

படு பிஸியாக

படு பிஸியாக

பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தானா மிஷன் மஞ்சு மற்றும் குட் பை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, பாலிவுட்டில் 3வதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், தெலுங்கில் புஷ்பா, ஆடவாலு மீக்கு ஜோகர்லு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Read more about: rashmika mandana
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X