Rashmika disappointed : ஆர்டர் போட்டது பர்கருக்கு.. ஆனா வந்தது என்ன தெரியுமா? ஏமாற்றத்தில் ராஷ்மிகா!
ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ்ஷாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார்.
தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தான் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ்ஷாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு பான் இந்தியா நாயகி என்ற அந்தஸ்தை கொடுத்தது. வெளியான அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது.

விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி
தமிழிலும் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழை பொழிந்தது. அந்த வகையில் ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது வாரிசு படம். இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கியிருந்த நிலையில், படத்தின் பாடல்களில் விஜய்க்கு சமமாக தன்னுடைய ஆட்டத்தை போட்டிருந்தார் ராஷ்மிகா.

விஜய்யின் தீவிர ரசிகை
தன்னை விஜய்யின் தீவிர ரசிகை என்று வாரிசு படத்தின் பூஜையின்போது ராஷ்மிகா மந்தனா அறிமுகப்படுத்திக் கொண்டார். சிறுவயதில் தான் தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து விஜய்யின் படங்களை பார்த்து அவருடைய ரசிகையாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வாரிசு படத்தின் பூஜையின்போது, விஜய்க்கு அவர் தன்னுடைய கைகளாலேயே திருஷ்டி கழித்த சம்பவமும் நடந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில விளம்பரப் படங்களின் வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் தறபோது ராஷ்மிகா வெளியிட்டுள்ள வீடியோ அவருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பர்கருக்கு பதிலாக hourglass
ஆன்லைனில் ராஷ்மிகா பர்கர் ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு hourglass டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா, இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் பகிர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தின் பெயரையும் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா
தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், புஷ்பா 2 படத்தை முன்னதாக திட்டமிட்டதற்கு மாறாக மிகவும் பிரம்மாண்டமான திரைக்கதையுடன் எடுத்து வருகிறார் இயக்குநர் சுகுமார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் கெட்டப்புடன் காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











