ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன தங்கச்சியா ? அக்காவை போல அவரும் செம க்யூட்..லைக்குகளை அள்ளும் புகைப்படம் !

சென்னை : தாறுமாறான அழகு, சுண்டி இழுக்கும் உடல்வாகு என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வரும் ராஷ்மிகா நேஷனல் க்ரஷ் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் பல லைக்குகளை அள்ளி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

கிரிக் பார்ட்டி என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு செம கவர்ச்சியாக நடித்திருந்தார். அதுவும், வா சாமி பாடலுக்கு அம்மணி ஆடிய ஆட்டம் பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.

பல படங்களில்

பல படங்களில்

நடிகை ராஷ்மிகா, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். தற்போது அமிதாப் பச்சனுடன் குட்பை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரன்பிர் கபூருடன் அனிமல் படத்திலும் புஷ்பா 2 திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

தளபதி 66

தளபதி 66

தளபதியின் தீவிர ரசிகையான ராஷ்மிகா தளபதி66 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறா. ஸ்ரீ வெங்கடேஷ்வரா தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் நடித்து வருவதான் மூலம் ராஷ்மிகாவின் நீண்டநாள் ஆசை நிறைவேறி உள்ளது.

குடும்ப புகைப்படம்

குடும்ப புகைப்படம்

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தனது குடும்ப புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தந்தை மதன் மந்தனா, அம்மா சுமன் மந்தனா, தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு தலைப்பாக, இதுதான் மந்தனா குடும்பம். நீங்கள்தான் எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்து இருக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு இப்படி க்யூட்டான குட்டி தங்கச்சியா என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X