மீண்டும் காதலில் விழுந்த ராஷ்மிகா… யார் அந்த அதிர்ஷ்டசாலி ?
சென்னை : நேஷ்னல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தானா மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக இணையத்தில் செய்தி வேகமாக பரவிவருகிறது.
Recommended Video
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ராஷ்மிகா அறிமுகம்
2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

கீதா கோவிந்தம்
இளம் ரசிகைகளின் சாக்லெட் பாயான விஜய் தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து இவர்கள் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு போனது. அந்த திரைப்படத்தில் ராஷ்மிகாவின் சிறு சிறு அசைவுகளையும் அவரது ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து உச்சுகொட்டினர். குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

சுல்தான் படத்தில்
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மீண்டும் காதலில் விழுந்த ராஷ்மிகா
இந்நிலையில், ராஷ்மிகா குறித்து சர்ச்சை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இருவரும் காதலிப்பதாக மீண்டும் செய்தி வைரலாக பரவி வருகிறது. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படங்களில் ஒன்றாக நடித்த இந்த ஜோடி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகும். இந்த செய்தி உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமூக வலைத்தளத்திலும் ராஷ்மிகா வெளியிட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 மில்லியன் ஃபாலோவர்ஸ்
நேஷ்னல் க்ரஷ் கொண்ட ராஷ்மிகா மந்தானாவுக்கு ஒரே மாதத்தில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தற்போது தொட்டிருக்கிறார். இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

படு பிஸியாக
பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தானா மிஷன் மஞ்சு மற்றும் குட் பை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, பாலிவுட்டில் மூன்றாவதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், தெலுங்கில் புஷ்பா, ஆடவாலு மீக்கு ஜோகர்லு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விஜய்யுடன்
பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது, அதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











