விஜய் -திரிஷாதான் சின்ன வயசுல இருந்தே என்னோட ஃபேவரிட் ஜோடி.. சிலிர்த்த புஷ்பா 2 நடிகை!
சென்னை: நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக நடிகர்கள், நடிகைகளுக்கும் ஆல்டைம் ஃபேவரைட். அவரது அதிகமான படங்கள் அனைவரின் எவர்கிரீன் பேவரிட்டாக இருந்தாலும் கில்லி படம் இதில் எப்போதுமே முதன்மை இடத்தை பிடித்து விடும். அந்த வகையில் இந்தப் படம் மட்டுமில்லை. விஜய் -திரிஷா ஜோடியும் தன்னுடைய பேவரைட்தான் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக சிறப்பான வசூலையும் குவித்தது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய் -ராஷ்மிகா மந்தனா ஜோடி சிறப்பாக பார்க்கப்பட்டது. குறிப்பாக இவர்கள் இருவரும் பாடல்களில் மிகச்சிறப்பான பர்ஃபார்மென்சை கொடுத்திருந்தனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிக சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் மிரட்டலான வசூலை பெற்று வருகின்றன. ஆயினும் விஜய் நடிப்பை விட்டு விட்டு அரசியலை தேர்ந்தெடுத்துள்ளார். தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் வில்லனாக பாபி தியோலும் இணைந்துள்ளனர். அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா: விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான வாரிசு படம் மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா மந்தனா விஜய் தான் தன்னுடைய முதல் பேவரிட் ஹீரோ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கூர்க்கில் பிறந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவின் ஃபேவரிட் ஜோடி: சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்திிருந்த புஷ்பா 2 படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, சர்வதேச அளவில் படம் 1500 கோடிகளை தாண்டி வசூலித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் நடனமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா தான் தன்னுடைய ஃபேவரைட் ஜோடி என்று தெரிவித்துள்ளார். தான் சிறுவயதில் அவர்கள் நடிப்பில் வெளியான கில்லி படத்தை முதல்முறையாக பார்த்ததாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.
விஜய் -திரிஷா ஜோடி: திரையரங்கில் இந்தப் படத்தைதான் முதலில் பார்த்ததாகவும் தான் திரையரங்கில் பார்த்த முதல் ஹீரோ விஜய்தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் அப்படி போடு பாடலுக்கு அதிகமான முறை வைப் செய்து நடனமாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய அப்பா ரஜினி ரசிகராக இருந்தபோதிலும் தான் முதன்முதலில் பார்த்த படம் கில்லி தான் என்றும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் இவர் சிறுவயதாக இருந்தபோது சென்னையிலும் சில காலங்கள் வசித்துள்ள நிலையில் தான், முதன்முதலில் பார்த்த படம் கில்லி தான் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேவரைட் நாயகனுடன் ஜோடி சேர்ந்து ராஷ்மிகா மந்தனா நடித்து விட்டார். இதனிடையே ராஷ்மிகா மந்தனா சிறுவயதில் பார்த்து வியந்த நடிகை திரிஷா தற்போதும் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











