பிசினஸ் வுமனாக மாறிய ராஷ்மிகா.. திடீரென முதலீடு செய்ய என்ன காரணம்?

சென்னை : முன்னணி நடிகைகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதை வழக்கமாகவைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகாவும் தற்போது பிசினஸ் வுமனாக மாறிய பெரிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் கனவுகன்னியாக மாறிவிட்டார். அந்த படத்தில் இடம் பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாலா' என்ற ஒரே பாடலின் மூலம் ராஷ்மிகா புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

இதையடுத்து,கன்னடம்,தெலுங்கு என கொடிகட்டிப்பறந்த நேஷனஸ் கிரஷ் நாயகி தற்போது பாலிவுட்டில் தடம் பாதித்து பிஸியாக நடித்து வருகிறார்.

வாரிசு படத்தில்

வாரிசு படத்தில்

விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து, தெலுங்கில் துல்கர் சல்மானுடன் சீதாராமன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் ஹிந்தியில் மஞ்சு மிஷன், குட்பை ஆகிய இரண்டு திரைப்படங்களில் படுபிஸியான நடித்து வருகிறார்.

பிசினஸ் வுமன் ராஷ்மிகா

பிசினஸ் வுமன் ராஷ்மிகா

காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள் இது நடிகைகளுக்கு பொருத்தமான வரியாக இருக்கும். திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இருக்கும் போதே முன் யோசனையாக பல தொழில்களில் முதலீடு செய்து விடுகின்றனர். பெரும்பாலான நடிகைகள் தாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்ற பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது வழக்கம்.

அழகுசாதன நிறுவனத்தில்

அழகுசாதன நிறுவனத்தில்

பிற நடிகைகளைப் போலவே ராஷ்மிகாவும் ஓடியோடி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் Plum என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அவர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது மட்டும் இல்லாமல், முதலீடு செய்திருக்கும் அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் ராஷ்மிகா மந்தனாவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த plum நிறுவனத்தில் அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்ற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக விமானத்தில் செல்லும்போது தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை எடுத்து செல்வதாகவும், அந்த நாய்க்குட்டிக்கான விமான டிக்கெட்டை தயாரிப்பாளரே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின இந்த செய்திக்கு ராஷ்மிகா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X