Rashmika mandanna: புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகாவின் தாராளம்.. புஷ்பா படத்தையே பீட் செஞ்சிட்டாங்களே!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா தி ரூல் படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா ஜோடியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு இடத்திலும் ராஷ்மிகா மந்தனாவின் கெட்டப் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக மும்பையில் நடந்த பிரமோஷனில் கருப்புநிற புடவை அணிந்து அவர் வந்ததை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயினர். இது மட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனுடன் இணைந்து மேடையில் சாமி பாடலுக்கு அவர் போட்ட ஆட்டமும் ட்ரெண்டானது.

rashmika mandanna pushpa 2 movie allu arjun 2

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய மாஸை வெளிப்படுத்தி 500 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படததை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த நிலையில் படத்தின் சிறப்பான வெற்றி அடுத்த பாகத்தை மிகவும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க வழியை ஏற்படுத்தியது. தற்போது இரண்டாவது பாகம் மிரட்டலான கதையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பீலிங்ஸ் பாடல்: இந்தப்படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் படத்தின் பாடல்களும் கிறங்கடிக்க வைத்து வருகின்றன.முதல் பாகத்திலும் இந்தப் படத்தின் பாடல்கள்தான் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இதனிடையே, தற்போது இரண்டாவது பாகத்திலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மாஸ் காட்டி வருகின்றன. ஒவ்வொரு பாடலையும் சிறப்பாக்கியுள்ளார் இசையமைப்பாளர். நேற்றைய தினம் பீலிங்ஸ் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள நிலையில் படத்தில் அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளது.

rashmika mandanna pushpa 2 movie allu arjun 2

ராஷ்மிகா மந்தனா தாராளம்: பீலிங்ஸ் பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இருவரும் அதிகமாக இறங்கி குத்தியுள்ளனர். முதல் பாகத்திலேயே படம் முழுவதிலும் புடவையை கட்டியும் கட்டாமலும் சுற்றிக் கொண்டிருந்தார் ராஷ்மிகா.இதனிடையே புஷ்பா 2 படத்திலும் அதைவிடகூடுதல் தாராளம் காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பாடல்களிலும் வெளிப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டை ராஷ்மிகா மந்தனா கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் அவருக்கு 10 கோடி ரூபாய் வரையில் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, படத்திற்கு படம் அவருடைய சம்பளமும் உயர்ந்து வருகிறது.

rashmika mandanna pushpa 2 movie allu arjun 2

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அடுத்ததாக குபேரா படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழில் வாரிசு படத்தையடுத்து ராஷ்மிகாவின் நேரடி தமிழ் படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்திலும் ராஷ்மிகாவின் கேரக்டர் குறித்து அதிகமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X