யார் கொடுத்த ரோஜா? வெக்கத்தில் பூரித்துபோய் நிற்கும் ராஷ்மிகா மந்தனா.. ஒரு வேளை அவரா இருக்குமோ?

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் இருந்து தனது சினிமா கெரியரைத் தொடங்கியவர். இவர் தற்போது தெலுங்கில் மட்டும் இல்லாமல், தமிழ், ஹிந்தி என அடுத்தடுத்து கலக்கி வருகிறார். இவர் இந்தியில் அறிமுகமான அனிமல் படத்தில் தாராளமாக கிளாமர் காட்சிகளில் நடித்திருந்தார். ரம்ஜானுக்கு இவரது நடிப்பில் சிகிந்தர் படம் வெளியானது. ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை, குறிப்பாக சினிமாவில் நடிக்க இவர் வாய்ப்பு தேடியபோது தயாரிப்பாளர்கள் இவரை மிகவும் உதாசினப்படுத்தியது குறித்து அவரே தெரிவித்தார். தற்போது தெலுங்கு சினிமா உலகில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் மோஸ்ட் வான்டேட் நடிகையாக உள்ளார்.

மேலும் இவர் இந்திய சினிமாவில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டாப் 5இல் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறி தற்போது அது காதலாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது அவுட்டிங் செல்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

Actress Rashmika Mandanna Instagram Post With Rose Fans Asking Iis From Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா: இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் அவ்வப்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக உள்ளது. ஏற்கனவே புஷ்பா 2 படத்தின் புரோமோஷனுக்காக ராஷ்மிகா மந்தனா சென்னை வந்தபோது தனது மனதிற்கு நெருக்கமானவரின் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர் எனக் கூறினார். மேலும் இவர்கள் இருவரது சமூக வலைதள போஸ்டுகளும் இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பாமல் இல்லை.

பிறந்த நாள் கொண்டாட்டம்: கடந்த மாதத்தில் ராஷ்மிகா தனது 29வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தனியாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், இவரது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அதே காலகட்டத்தில் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களும், ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த புகைப்படங்களுடன் ஒத்துப் போனதால் ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்கள் என வெளிப்படையாகவே அறிவிக்கலாமே என பேசி வருகிறார்கள்.

Actress Rashmika Mandanna Instagram Post With Rose Fans Asking Iis From Vijay Devarakonda

ரோஜா: இப்படியான நிலையில் ரசிகர்கள் பலரும் மீண்டும் இவர்களின் காதல் கிசுகிசுவைக் கிளறுவதைப் போன்ற ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். அதாவது ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் தலையில் வெள்ளை நிற பூவைச் சூடியுள்ளார். மேலும் கையில் ஒரு ரோஜாவை வைத்துக் கொண்டுள்ள இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நம்மை நாமே அவ்வப்போது பாராட்டிக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவைச் சந்திக்கும்போது எனவும் கேப்ஷன் இட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள், கையில் வைத்துள்ள ரோஜாவை உங்களுக்கு யார் கொடுத்தார்கள், அது நீங்கள் சொன்ன அந்த V என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X