செல்லத்துக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... பாவம் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பொழுது தென்னிந்தியாவில் கலக்கியது போலவே பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்
தமிழ் சினிமாவிற்கு சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
பாலிவுட்டில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா இப்பொழுது நாய்க்கு லிப் லாக் கொடுத்த பாசமிகு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

ரசிகர்களின் ஃபேவரைட்
விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றவர். தமிழில் எப்பொழுது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்

முன்னணி கதாநாயகியாக
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சுல்தான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது இந்த நிலையில் அடுத்தது தமிழில் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்பொழுது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது

அமிதாப் பச்சனுக்கு மகளாக
தென்னிந்தியாவை கலக்கியது போலவே பாலிவுட்டிலும் ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்புகள் குவிகிறது அந்த வகையில் இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் இந்திய ராணுவ உளவு துறை நடத்திய அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உருவாகும் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார். அதைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மகளாக குட் பாய் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

செல்ல நாய்குட்டிக்கு லிப்லாக்
விரைவில் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வர உள்ள ராஷ்மிகா மந்தனா அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் க்யூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்குட்டிக்கு லிப்லாக் கொடுத்த பாசமிகு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அந்த நாயாக நான் இருந்திருக்கக் கூடாதா என புலம்பிக் கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











