Rashmika Mandanna: பான் இந்தியா நாயகியாக ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா.. இவ்வளவு அவமானங்களை சந்தித்தாரா
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா சர்வதேச அளவில் அதிகமான கவனத்தை பெற்றவராக காணப்படுகிறார். பான் இந்தியா நாயகியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவிற்கு இந்தப்படம் வரவேற்பை பெற்றுத் தந்தது.
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இரு பாலிவுட் படங்களிலும் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களை சந்தித்து வருகிறார் ராஷ்மிகா.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பட நாயகியாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். பான் இந்தியா பட நாயகியாகவும் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய வெற்றியையும் விமர்சனங்களையும் ராஷ்மிகாவிற்கு பெற்றுக் கொடுத்தது. இதனிடையே நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்திருந்தார் ராஷ்மிகா.
புஷ்பா 2 பட நாயகி: முன்னதாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இதனிடையே சுகுமார் இயக்கத்தில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழிலும் தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அனிமல் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ராஷ்மிகா. அடுத்தடுத்த அழகான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
ஆடிஷன்களில் நிராகரிப்பு: அவ்வப்போது பிரமோஷன்கள் உள்ளிட்டவற்றிற்காக பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தான் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கு முன்னதாக தன்னை நடிகை போல தெரியவில்லை என்று கூறி 20 முதல் 25 ஆடிஷன்களில் நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறு பல அவமானங்களை நிராகரிப்புகளை கடந்துதான் தற்போது பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ராஷ்மிகா காணப்படுகிறார். ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காராக காணப்படுகிறார்.
ராஷ்மிகா நிராகரித்த படங்கள்: ராஷ்மிகா மந்தனாவை முன்னதாக பல நிறுவனங்கள் ரிஜெக்ட் செய்த நிலையில், கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா நிராகரித்த படங்கள் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார். இதேபோல, பீஸ்ட் படத்திலும் இவருக்கு நடிக்க கிடைத்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்தே வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்திருந்தார். இதேபோல, பாலிவுட்டில் ஷாஹித் கபூரின் ஜெர்சி, சஞ்சய் லீலா பன்சாலியின் படம் மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பும் அவரால் ஏற்க முடியாமல் போனது.


Click it and Unblock the Notifications











