மனதை அள்ளிய.. "பச்சைக் கிளி" ராஷ்மிகா மந்தனா.. வித விதமான போஸ் !
சென்னை : பிஷ்மா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா வித விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
படிக்கும் காலத்திலேயே மாடலிங் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார் ராஷ்மிகா மந்தனா. அக்காலத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்தார்.

இதன் பின் ரஷ்சித் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த வருடத்தில் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். சாலோ என்ற படத்தில் அறிமுகமானார் ஆனால் தனது இரண்டாவது படம் முலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவர்கொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று எல்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கீதா கோவிந்தம் படத்தில் நடித்து கிடைத்த மார்கெட்டை பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார்.

தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் இவர் நேற்று பிஷ்மா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல வித்தியாச வித்தியாசமாக குயூட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











