ஸ்ரீவள்ளி.. ஆசையாக கூப்பிட்ட ரசிகர்கள்.. ராஷ்மிகா மந்தனா என்ன செஞ்சாங்கன்னு பாருங்க!
மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து விஜய், கார்த்தி உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனுஷுடன் இவர் இணைந்துள்ள குபேரா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதே போல தெலுங்கிலும் புஷ்பா 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமூக வலைதள பக்கங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ராஷ்மிகா வெளியிடங்களில் தன்னுடைய ரசிகர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தி மொழி படங்களிலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா அடுத்ததாக தனுஷ் கூட்டணியில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
புஷ்பா 2 படம்: படத்தில் சமந்தா ஆட்டம் போட்டிருந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அடுத்தபடியாக இந்த படத்தின் ஐயா சாமி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடலில் ராஷ்மிகா மந்தனாவின் ஆட்டமும் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக ரிலீசாக உள்ள புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனனின் மனைவியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதையடுத்து தமிழிலம் இவரது குபேரா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து மாஸ் ஹிட்டுகளை ராஷ்மிகா கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்திற்கு பிறகு பான் இந்தியா நாயகியாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

ரசிகர்கள் கொஞ்சல்ஸ்: இந்தப் படத்திற்கு பிறகு ராஷ்மிகாவின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து இவரது படங்கள் ரிலீசாகவுள்ளதால் இவரது மார்க்கெட் வேல்யூ மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தற்போது விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை அங்கிருந்த ரசிகர்கள் அவரது கேரக்டர் பெயர்களை வைத்து ஸ்ரீவள்ளி, கீதாஞ்சலி என அடுத்தடுத்து அழைத்தனர். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த ராஷ்மிகா மந்தனா, அவர்களுக்கு திரும்பி க்யூட்டான தன்னுடைய ஸ்மைலை பரிசளித்துள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டார்.
காருக்குள் கைவிட்ட நபர்: மிகப்பெரிய ஸ்டாராக இருந்த போதிலும் ரசிகர்கள் தான் தன்னுடைய வளர்ச்சிக்கு பிரதானம் என்பதில் ராஷ்மிகா மந்தனா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே மற்றொரு நிகழ்வின்போது காருக்குள் ஏறிய நிலையிலும் காருக்கும் கையை விட்டு வீடியோ எடுக்க முயன்ற நபரையும் தன்னுடைய சிரிப்பாலேயே சமாளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. எந்த நிலையிலும் தான் கூல்தான் என்பதை தன்னுடைய ட்ரேட்மார்க் புன்னகையுடன் நிரூபித்து வருகிறார் இந்த பான் இந்தியா குயின்.



Click it and Unblock the Notifications











