கதவைத்திறந்து பறக்க காத்திருக்கும் ரஷ்மிகா... சிரிப்பால் மயக்கும் புகைப்படம்!

சென்னை: நடிகை ரஷ்மிகா தென்னிந்தியாவை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட் துறையிலும் கால் தடத்தை பதித்துள்ளார்

நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

க்யூட்டான நடிப்பிலிருந்து இப்பொழுது கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் ரஷ்மிகா மந்தனா கதவைத் திறந்து பறக்க காத்திருக்கும் வெள்ளைப்புறா போல சிரிப்பால் மயக்கும் அழகிய புகைப் படத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

தென்னிந்தியாவில் கலக்கு கலக்கி

தென்னிந்தியாவில் கலக்கு கலக்கி

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக பிஸியாக நடித்து வந்த நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த டியர் காம்ரேட் மற்றும் கீதாகோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் தனது க்யூட் நடிப்பின் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை அடித்த ரஷ்மிகா மந்தனாவுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்தனர். தமிழில் எப்போது ரஷ்மிகா மந்தனா அறிமுகமாவார் என ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கையில் ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தனது க்யூட் நடிப்பின் மூலம் ரசிகர்களை கொள்ளை அடித்த ரஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் கலக்கு கலக்கி முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்

பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்

இந்தியாவில் கிரஷ் என அனைவராலும் பாராட்டப்பட்ட இவருக்கு இப்பொழுது பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்தவகையில் இளம் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் இந்த படம் இந்திய ராணுவத்தில் நடந்த அண்டர் கவர் ஆபரேஷனை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கையில ரஷ்மிகா மந்தனா இதில் நடித்து அறிமுகமாவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிஷன் மஞ்சுவை தொடர்ந்து அமிதாப் பச்சனுக்கு மகளாக குட்பாய் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக

விஜய்க்கு ஜோடியாக

நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

கதவைத்திறந்து பறக்க

கதவைத்திறந்து பறக்க

இதுவரை க்யூட்டான நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த ரஷ்மிகா இப்பொழுது கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை புறா கதவைத்திறந்து பறக்க காத்திருப்பது போல கொள்ளை அழகில் சிரிப்பால் மயக்கும் ரஷ்மிகாவின் அழகிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X