கேட்டாலே பக்குனு ஆகுதே..ராஷ்மிகாவுக்கு சம்பளம் இத்தனை கோடியா? டென்ஷனாகும் தயாரிப்பாளர்கள்!
சென்னை : நேஷ்னல் க்ரஷ் நாயகி ராஷ்மிகா மந்தானா தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், ரசிகர்களிடம் டாப் ஹீரோயின் ஆக்கியது தெலுங்கு படங்கள்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்திருந்த புஷ்பா படம் வெளியாகி இவரை உலக அளவில் பேமஸாக்கிவிட்டது.

அல்லு அர்ஜூன்
அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கிராமத்து பெண் கதபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. ஆட்டம், பாட்டம், ரொமான்ஸ்,கவர்ச்சி என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார். குறிப்பாக வா சாமி..வாயா சாமி போட்ட குத்தாட்டத்தை ரசிகர்கள் தற்போது வரை ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.

இத்தனை கோடியா?
புஷ்பா படம் இவரின் ரேஞ்சையே மாற்றிவிட்டதால், தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார் தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா இப்போது அதன் இரண்டாம் பாகத்துக்கு ரூ.4 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் வேறுவழியில்லாமல் சம்பளத்தை கொடுக்கச் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாரிசு
தற்போது ராஷ்மிகா வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மிகவும் போல்டான கேரக்டரில், குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் வைத்துள்ள கேரக்டரில் நடித்துள்ளாராம் ராஷ்மிகா. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது, தற்போது படக்குழு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றது.
Recommended Video

பாலிவுட்டில் பிஸி
பாலிவுட்டிலும் தனது என்ட்ரியை கொடுத்துள்ள ராஷ்மிகா அமிதாப் பச்சன் மற்றும் நீனா குப்தா ஆகியோருடன் இணைந்து மிஷன் மஜ்னு படத்தில் நடித்துள்ளார். மேலும், குட்பை தொடர்ந்து ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். முதல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே பாலிவுட்டில் அவர் மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











