Rashmika mandanna :உதட்டை குவித்து.. ரசிகர்களுக்கு ராஷ்மிகா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
புஷ்பா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் அடுத்தடுத்து சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்திருந்த புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான நிலையில், மிகச்சிறந்த வெற்றியை சர்வதேச அளவில் அந்தப் படம் பெற்றுத் தந்தது. இதையடுத்து தற்போது அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழிலும் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்தப் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்த நிலையிலும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே அடுத்தப் படமே நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பை ராஷ்மிகாவிற்கு பெற்றுத் தந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் மிகச்சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. புஷ்பா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நேஷனல் க்ரஷ் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தொடர்ந்து வருகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இநத்ப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தேவ் மோகன் ராஷ்மிகாவிற்கு ஜோடியாகியுள்ளார். ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். படத்தை இந்தி மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இந்தப் படத்தில் நடிக்க சமந்தாவிடம் தான் படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, தற்போது ராஷ்மிகா அந்த ரோலில் கமிட்டாகியுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய உதட்டை குவித்து ரசிகர்களுக்கு தன்னுடைய அன்பை பரிசாக கொடுத்துள்ளார். இந்த பதிவை அவர் வெளியிட்ட 5 மணிநேரத்திலேயே ஏறக்குறைய 19 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











