Rashmika mandanna: புஷ்பா 2 பட சூட்டிங்கில் தூங்கிய ராஷ்மிகா மந்தனா.. அட இவரு என்ன இப்படி பார்க்குறாரு!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 5ம் தேதி அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்த புஷ்பா 2 படம் சர்வதேச அளவில் வெளியாகி மிகச் சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் கடந்த மூன்று நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 621 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் வாரயிறுதி நாளாக உள்ள நிலையில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் சில தினங்களிலேயே ஆயிரம் கோடி கிளப்பில் புஷ்பா 2 படம் இணையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார். புஷ்பா படத்தின் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் வசூல் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. கடந்த ஆண்டில் பாலிவுட்டில் இவர் நடிப்பில் வெளியான அனிமல் படமும் இவருக்கு மிக சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. அடுத்ததாக தமிழில் தனுஷுடன் இவர் குபேரா படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படம்: கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தில் இவரது கவர்ச்சி ஆட்டம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில கலவையான விமர்சனங்களையும் இவரது ஆட்டம் பெற்றுள்ள நிலையில் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள ஸ்ரீலீலாவை காட்டிலும் ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ராஷ்மிகா மந்தனா நீடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ராஷ்மிகாவை சுற்றி கதைக்களம்: புஷ்பா படத்தின் மாஸான அட்ராக்ஷன்களில் ஒன்றாக அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி பார்க்கப்படும் நிலையில் கண்டிப்பாக புஷ்பா 3 படத்திலும் ராஷ்மிகா இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். புஷ்பா 2 படத்தில் சில காட்சிகளில் மட்டுமே ராஷ்மிகா மந்தனா காணப்படுகிறார். ஆனால் அவரை சுற்றியே கதைக்களத்தை இயக்குநர் சுகுமார் அமைத்துள்ளார். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்று அவமானப்படும் புஷ்பா, அதற்காக எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியீடு: இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் சூட்டிங்கின்போது தான் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா பதிவு செய்துள்ளார். மிகப்பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவருடைய டெடிகேஷன் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் வெளிப்படுகிறது. அடுத்தடுத்து டயலாக் பேப்பர்களை வைத்துக்கொண்டு அவர் அதை எழுதி மனப்பாடம் செய்வதாகவும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படுகிறது. இதனிடையே ஒரு புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஷூட்டிங்கின்போது தூங்குவதாகவும் அங்கே வரும் இயக்குநர் சுகுமார் அவரை நின்று பார்ப்பதாகவும் காணப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகவும் ஸ்டைலிஷ்ஷான ராஷ்மிகா மந்தனா, புஷ்பா 2 படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்துள்ளார். ஆனாலும் தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ராஷ்மிகாவின் அடுத்தடுத்த படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்து வரும்நிலையில் அடுத்த ஆண்டும் அவரது படங்கள் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











