Rashmika: என்னை டாக்சிக் உறவில் இருந்து காப்பாற்றியது விஜய் தேவரகொண்டா தான்.. ராஷ்மிகா!
சென்னை: இந்த ஆண்டின் அதிகம் பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் உள்ளது. இருவருக்கும் பிப்ரவரி 26ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், மோசமான டாக்சிக் உறவில் இருந்து என்னை காப்பாற்றியது விஜய தேவரகொண்டா தான் என ராஷ்மிகா அளித்துள்ள பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் 'கீதா கோவிந்தம்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அந்த படம் வெற்றி பெற்று நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தில் இருவரும் நடித்த போதே, காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதன் இருவரும் மீண்டும் சேர்ந்து 'டியர் காம்ரட்' படத்தில் நடித்தனர். அதன் இருவரும் டேட்டிங் செல்வதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல விதமான செய்திகள் பரவி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி ஓராண்டுக்கு மேலாக பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

நடிகை ராஷ்மிகா மந்தனா: வரும் பிப்ரவரி 26ம் தேதி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இடையிலான திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த திருமண பத்திரிகையானது, திரையுலக பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தை தொடர்ந்து மார்ச் 4 ந் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அதிகாரபூர்வ திருமண பத்திரிகையா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.
மோசமான ரிலேஷன்ஷிப்: இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, 'கேர்ள் பிராண்ட்' படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில், டாக்சிக் ரிலேஷன்ஷிப் குறித்து பேசி உள்ளார். அதில், தனிப்பட்ட வாழ்க்கையில் நான் ஒரு கடினமான கட்டத்தை கடந்து வந்ததாகவும், உணர்ச்சி ரீதியாக சோர்வாக இருந்தேன். அந்த நேரத்தில் விஜய் தேவரகொண்ட எனக்கு துணையாக இருந்து, மோசமான டாக்சிக்கான ரிலேஷன்ஷிப்பில் இருந்து என்னை மீட்டு கொண்டு வந்தார். இது எனக்கு நம்பிக்கையையும், முன்னேற உதவியது. 'கேர்ள் பிராண்ட்' படத்தில் பூமா கதாபாத்திரம் படும் கஷ்டம் போல, நானும் கஷ்டப்பட்டேன் என்று ராஷ்மிகா அந்த பேட்டியில் பேசி இருந்தார். தற்போது அந்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











