ஸ்ட்ராப் லெஸ்.. குட்டையான ட்ரான்ஸ்பரண்ட் உடை.. கவர்ச்சி விருந்துவைத்த ராஷ்மிகா!
மும்பை : நடிகை ராஷ்மிகா மந்தனா ஜீ சினி விருது விழாவில், அரைகுறை ஆடையில் வந்து ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ராஷ்மிகா.
தற்போது இவர், தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் படு பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

நடிகை ராஷ்மிகா
துறுதுறுப்பான பார்வை... பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் அழகு... என திரைத்துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே இளசுகளில் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் க்யூட்டான சிறு சிறு அசைவுகளுக்கு அடிமையான ரசிகர்கள் ராஷ்மிகாவை விடாது பின் தொடர்ந்து வருகின்றனர்.

புஷ்பா படத்தில்
நடிகை ராஷ்மிகா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா' படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அதுவும், வா சாமி வாயா சாமி பாடலுக்கு அம்மணி ஆடிய ஆட்டம் பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.

அடுத்தடுத்து கைவசம் உள்ள படம்
தமிழில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் ஆசை நிறைவேற்றிக்கொண்டார். பாலிவுட்டில் குட்பை படத்தில் நடித்து பெயர் எடுத்த ராஷ்மிகா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
தற்போது ரன்பிர் கபூருடன் அனிமல் படத்திலும் புஷ்பா 2 திரைப்படமும் ராஷ்மிகாவின் கைவசம் வைத்துள்ளார். இதில் புஷ்பா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக புஷ்பா 2 திரைப்படம் உள்ளது.

படு கவர்ச்சியான உடையில்
நடிகை ராஷ்மிகா ஜி சினி விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்று ரசிகர்கனை அலறவிட்டுள்ளார். கருப்பு ஸ்ட்ராப் லெஸ் உடையில் மொத்த தொடை அழகையும் காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். இந்த போட்டோவை இணையத்தில் வெளியானதை அடுத்து, ராஷ்மிகா பாலிவுட்டிற்கு போனதில் இருந்து, ஆளே மாறிவிட்டார் என்றும், இப்படியே கவர்ச்சி காட்டுவது நல்லது இல்லை என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











