அப்படி இல்ல இப்படி.. புஷ்பா 2 ஸ்டெப்பை கற்றுக்கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற கம் கம் கணேஷ் என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு, புஷ்பா 2 படத்தில் 'சூசெகி' பாடலின் ஸ்டெப்பை கற்றுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். பார்த்தவுடன் கவர்ந்து இழுக்கும் அழகு, கலகலப்பான பேச்சு, துறுதுறுப்பான பார்வை என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சினிமாவுக்கு வந்து சில ஆண்டுகளே ஆனாலும், இவர் நேஷ்னல் க்ரஷ் நடிகை என பெயர் எடுத்துள்ளார். இவரின் க்யூட்டான சிறு சிறு அசைவுகளுக்கு அடிமையான ரசிகர்கள் ராஷ்மிகாவை விடாது பின் தொடர்ந்து வருகின்றனர்.

Actress Rashmika mandanna teaches pushpa 2 soseki hook dance step to anand deverakonda

அடுத்தடுத்த படங்களில்: விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா, தமிழில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். பாலிவுட்டில் அபிதாப் பச்சனுடன் குட்பை படத்தில் நடித்து பெயர் எடுத்த ராஷ்மிகா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பாலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறினார்.

புஷ்பா: அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி வா சாமி வாயா சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டார். அந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா2 படத்திலும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி டிரெண்டான நிலையில் இரண்டாவது சிங்கிள் நாளை காலை வெளியாக உள்ளது.

Actress Rashmika mandanna teaches pushpa 2 soseki hook dance step to anand deverakonda

அப்படி இல்ல இப்படி: இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற கம் கம் கணேஷ் என்கிற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்மிகா, வெள்ளை நிற சேலை அணிந்து தேவதை போல் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு , புஷ்பா 2 படத்தின் 'சூசெகி' பாடலின் ஸ்டெப்பை கற்றுக்கொடுக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X