விவசாயியாக மாறிய ராஷ்மிகா மந்தனா... எப்படி இருந்த நாங்க இப்படி மாட்டிகிட்டோம்!
சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பொழுது விவசாயியாக மாறி வயலில் உழவு ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் முதன்முறையாக, கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருக்கும் சுல்தான் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இந்தியிலும் படுபிஸியாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது சேற்று வயலில் உழவு ஓட்டும் வீடியோவை வெளியிட்டு, ' எப்படி இருந்த நான் இப்படி மாட்டிக்கிட்டேன்' என பதிவிட்டுள்ளார்.

தமிழில் அறிமுகமாகிறார்
அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களில் ஒப்பந்தமாகி இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் மிக விரைவாகவே இடம் பிடித்த ரஷ்மிகா மந்தனா, தமிழிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

ரெமோ இயக்குனர்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படமான சுல்தான் பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். விவசாயத்தையும் அதன் தேவைகளையும் முன்னிறுத்தி இதில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சுவாரசியமான வீடியோ
சுல்தான் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில் சமீபத்தில் தமிழ் மண்ணின் மனத்துடன் எப்படி இருந்த நாங்க என்ற பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த சுவாரசியமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தி உள்ளார்.

சுட்சிவேஷனுக்கு தகுந்தவாறு
அந்த வீடியோவில் ரஷ்மிகா மந்தனா தமிழ் பெண்ணாகவே மாறி சேற்று வயலில் குட்டி டிராக்டரை கொண்டு வயலை உழவு செய்கிறார். இந்த வீடியோ சுல்தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது. இப்பொழுது ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பேக்ரவுண்ட் பாடலாக சமீபத்தில் வெளியான 'எப்படி இருந்த நாங்க இப்படி வந்து மாட்டிக் கொண்டோம்'பாடல் வரிகள், சுட்சிவேஷனுக்கு தகுந்தவாறு அன்று சூட்டிங்கில் நடந்ததும் எனக்கு அப்படித்தான் இருந்தது. குறிப்பாக இந்த காட்சி எடுக்கும்போது. இவ்வாறு சுல்தான் படத்தில் தான் ரசித்து நடித்த கதாபாத்திரத்தை பற்றி கலகலப்பாக ரஷ்மிகா கூறியிருக்க இப்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











