Rashmika mandanna: வாடகை தர முடியல.. பணத்தால் நின்ற திருமணம்.. ராஷ்மிகா மந்தனாவின் மறுபக்கம்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ரஷ்மிகா மந்தனா கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்திகள் பார்க்கலாம்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. Goodbye என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, Mission Majnu, Animal, Chhaava என அடுத்தடுத்து இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டை கலக்கி வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா: அழகான க்யூட் நடிகையான ராஷ்மிகா, Kirik Party என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில கன்னட படத்தில் நடித்த போதும், எதிர்பார்த்த அளவிற்கு பெயர் எடுக்காததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்து, நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் 21வது வயதில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது நிச்சயத்தோடு முடிந்துவிட்டது. இருவரும் பிரிந்ததற்கான காரணம் தற்போது வரை தெரிவில்லை.

காதல் கிசுகிசு: அதன் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் படத்தில் என்ட்ரி கொடுத்தார். அந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று முதல் படத்திலேயே, இவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். இதைத் தொடர்ந்து, மீண்டும், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக, இவர்களை திரையில் சேர்ந்து பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால், திரையில் ஜோடியாக வலம் வராத, இவர்கள், திரை மறைவில் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. பல வருடமாக இந்த கிசுகிசு இருந்தாலும் இருவரும் இதுபற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.
பணத்திற்கு கஷ்டம்: அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறுவயதில் பெற்றோர் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கையில் பணமே இருக்காது, பணம் இல்லாததால் வீடு வாடகை கொடுப்பதற்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். இதனால், மற்றவர்களிடம் பேசவும், பழகவுமே பயமாக இருந்ததாக ராஷ்மிகா என்று கூறியிருந்தார். ஒரு காலத்தில் வீட்டு வாடகைக்கூட கட்டமுடியாமல் தவித்து ராஷ்மிகா, இன்று 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகையாக, இந்திய திரையுலகிலேயே மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக ஜொலிக்கிறார்.
திறமையான நடிகை: ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு மட்டும் 66 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. ராஷ்மிகாவிற்கு ஏற்கனவே ஹைதராபாத்தில் ஒரு பங்களாக இருக்கும் நிலையில்,பாலிவுட்டில் தொடர்ந்து படவாய்ப்பு வருவதால், மும்பையில் அண்மையில் தான் ஒரு புதுவீடு வாங்கினார். மேலும், சொத்து சேர்க்கும் வழியில், பல்வேறு சந்தைகளில் தனது முதலீடுகளை விவரமாக செய்து வருகிறார்.அடுத்தடுத்து தோல்வி வந்த போதும், தனது விடாதமுயற்சியால் தொடர்ந்து படத்தில் நடித்து இன்று உழைப்பால் இந்த இடத்தை அவர் அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











