Kubera movie: தனுஷின் குபேரா படம்.. ராஷ்மிகா கொடுத்த ஸ்வீட் அப்டேட்.. ரெடியாகுங்க ரசிகர்களே!
சென்னை: நடிகர் தனுஷின் குபேரா படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக நாகார்ஜுனாவும் நடித்துள்ளனர். இவர்களது காம்பினேஷன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக தனுஷ், ராஷ்மிகா மற்றும் நாகார்ஜுனாவின் தனிப்பட்ட போஸ்டர்களை அடுத்தடுத்து படக்குழுவினர் வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளனர். இந்நிலையில் வரும் 15ம் தேதி இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவித்துள்ளார். இதையொட்டி சூப்பர் கூலான போஸ்டர் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். இதில் அவரது அழகு அள்ளுகிறது.

குபேரா படம்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்த தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக நாகார்ஜுனாவும் நடித்துள்ளனர். இவர்களின் அடுத்தடுத்த கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதல் கிளிம்ப்ஸ்: குபேரா படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தில் யாசகம் கேட்கும் நபரைப் போன்ற தோற்றத்தில் தனுஷை பார்க்க முடிந்தது. அடுத்தடுத்து நாகார்ஜுனா. ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர்களும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளனன. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதையொட்டி ராஷ்மிகா, தன்னுடைய மிகவும் அழகான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். ராயன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனுஷ் தற்போது இட்லி கடை பணத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் மற்ற இயக்குநர்கள் இயக்கத்திலும் அவர் நடித்து வருகிறார். அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு முறையான அறிவிப்பும் வெளியானது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: இதனிடையே ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுககி விடப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு கிறிஸ்துமசையொட்டி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











