ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய ராஷ்மிகா மந்தனா! ரசிகர்களை கிறங்கடிக்கும் வீடியோ ட்ரெண்ட்!
கொல்லம்: நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷ்னல் கிரஷ் என்பதுதான். இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் படம் எப்படியும் ஹிட் அடித்து விடுகின்றது. ஆனால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன்னால் முயன்ற அளவிற்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் செய்து விடுகின்றார்.

சமீபத்தில் இவர் ஹிந்தி படத்தில் நடிக்க ஆர்வம் அதிகரித்து அனிமல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியான காட்சிகளில் மட்டும் இல்லாமல், படுக்கையறை காட்சிகளிலும் பாலிவுட் உலகின் டாப் கதாநாயகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பாலிவுட் உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை ஒரே நேரத்தில் அணுகியதால் இன்றைக்கு பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு நேற்று அதாவது ஜூலை 25ஆம் தேதி வந்தார். அங்கு மிகவும் பிரமாண்டமான துணிக்கடையை திறந்து வைக்க வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா வந்திருந்தார். அப்போது அங்கு அவரைக் காண திரண்டிருந்த ரசிகர்கள் முன்னிலையில் தான் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடனமாடினார். குறிப்பாக புஷ்பா படத்தில் இருந்து ஸ்ரீ வள்ளி பாடலுக்கும், ஏ சாமி பாடலுக்கும் நடனமாடினார். அதேபோல் விஜய் உடன் தமிழில் நடித்திருந்த வாரிசு படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினார்.

ரஞ்சிதமே!: இந்த பாடல்களுக்கு எல்லாம் நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த பாடலில் இடம் பெற்றிருந்த சிக்னேச்சர் ஸ்டெப்களை மட்டும் ஆடினார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதில் ரஞ்சிதமே பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு ராஷ்மிக மந்தனா நடனம் ஆடும்போது அங்கிருந்த விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

டியர் காம்ரேட்: இன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படம் வெளியானது. இன்றுடன் அந்த படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த படத்தினை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

புஷ்பா 2: ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், அவரது நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குநர் சுகுமாறனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே உள்ளது என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











