Rashmika mandanna: கண்ணால் சுண்டியிழுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. யார்கிட்ட தெரியுமா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் பான் இந்தியா படங்களாக புஷ்பா 2 மற்றும் குபேரா படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி உள்ளார்.

இந்த படங்களின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகாவின் காதலராக கூறப்படும் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் நேற்றைய தினம் ராஷ்மிகா மந்தனா தீபாவளி கொண்டாட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதன் புகைப்படங்களையும் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

rashmika mandanna devisri prasad

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அவரது முந்தைய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக பான் இந்தியா படங்களாக புஷ்பா 2 மற்றும் குபேரா படங்கள் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரிலீசாக உள்ளன. இந்த படங்கள் ராஷ்மிகாவின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் படங்களிலும் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.

பாலிவுட் படங்கள்: இந்த படங்களின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலராக கூறப்படும் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை ராஷ்மிகா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் விஜய் தேவரகொண்டாவுடனான காதலை அவர் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் கலந்துக் கொண்ட ராஷ்மிகா மந்தனா. அவரைப் பார்த்து கண்களால் ஜாடை காட்டிய வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கண்களால் ஜாடை: புஷ்பா 2 படத்தில்தான் இவர்கள் இருவரும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகா. கண்களால் அவரிடம் அடுத்தடுத்து ஜாடை காட்டுகிறார். அவர்பதிலுக்கு என்ன செய்வது என்று முழிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரும் பதிலுக்கு ஜாடைகாட்டுவதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. தொடர்ந்து ஆண்கள் சும்மா இருந்தாலும் பெண்கள் சும்மா விட மாட்டார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்ததையும் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு தேவிஸ்ரீ பிரசாத் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சேட்டை செய்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதுவும் அழகாக தான் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குபேரா படத்தில் ராஷ்மிகா: புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவ்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தமிழிலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது- தன்னுடைய இயல்பான நடிப்பால், அழகால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் ராஷ்மிகாவின் சம்பளம் அடுத்தடுத்த வெற்றிகளால் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X