ப்லேஸரை கழட்டிவிட்டு பங்கமாக போஸ் கொடுத்த ரஷ்மிகா மந்தனா!
சென்னை: இதுவரை தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் பிரமிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்
குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்த ரஷ்மிகா மந்தனா சமீபகாலமாகவே கவர்ச்சியை அள்ளித் தெளித்து வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்லேஸரை கழட்டி பங்கமாக போஸ் கொடுத்துள்ள சூப்பர் கூல் புகைப்படம் வைரல் ஆகிறது.

க்யூட் நடிப்பின் மூலம்
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே இப்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். தன்னுடைய க்யூட் நடிப்பின் மூலம் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் மூலமும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உள்ளது.

தமிழில் நேரடியாக அறிமுகமானார்
இந்த நிலையில் தமிழில் நேரடியாக எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் அதிக செலவில் தயாரான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமானார்.

பாலிவுட்டில் அறிமுகம்
சுல்தான் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா இந்தியாவின் நேஷனல் க்ரஷ் எனவும் அழைக்கப்படுகிறார். இவரது புகழ் பாலிவுட் வரை பரவி இருக்க இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்திய ராணுவ உளவுத்துறையில் நடந்த அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் கால் தடத்தை பதிக்கிறார்.

ப்லேஸரை கழட்டி பங்கமான போஸ்
இந்தி சினிமாவின் ஆல்டைம் சூப்பர் ஸ்டாராக விளங்கிய கொண்டிருக்கும் அமிதாபச்சனுக்கு மகளாக என்ற குட்பைஜெர்ரி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இவ்வாறு இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ள ரஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி பார்க்கும் அனைவரையும் கிறங்க விட்டார். இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்லேஸரை கழட்டி கையில் வைத்துக் கொண்டு பங்கமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











