Rashmika mandanna: சவுந்தர்யா பயோபிக்கில் நடிக்க ஆசை.. ராஷ்மிகா அப்பா என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க ராஷ்மிகாவிற்கு அதிகமான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக டி51 படத்தில் கமிட்டாகியுள்ளார் ராஷ்மிகா. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தெலுங்கிலும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகத்திலும் ராஷ்மிகா நடித்திருந்த நிலையில், படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதன்மூலம் பான் இந்தியா ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராஷ்மிகா. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா தொடர்ந்து கடந்த ஆண்டில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மாஸ் காட்டியது. இந்தப் படத்திலும் ராஷ்மிகாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். விஜய், விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜூன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனிமல் படம் வெளியானது. பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அதிகமான வசூல் மழையை பொழிந்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டில் ராஷ்மிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பான் இந்தியா நாயகியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா.
தனுஷுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா: தமிழில் சுல்தான், வாரிசு என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக தனுஷின் டி51 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், தற்போது நாகார்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கில் இந்த மாத இறுதியில் தனுஷும், அடுத்த மாதத்தில் ராஷ்மிகாவும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை ராஷ்மிகாவும் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுந்தர்யா பயோ-பிக்கில் நடிக்க விருப்பம்: இந்நிலையில் தான் பிரபல நடிகை சவுந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க விருப்பப்படுவதாக ராஷ்மிகா தனது பேட்டியொன்றில் கூறியது தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தான் நடிக்க வருவதற்கு முன்னதாக தான் நடிகை சவுந்தர்யா போலவே இருப்பதாக தன்னுடைய அப்பா எப்போதும் தன்னிடம் கூறுவார் என்றும் ராஷ்மிகா பெருமிதத்துடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியான நடிகையாக ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்த நடிகை சவுந்தர்யா, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது பயோ பிக் எடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து உள்ளது.
ட்ரெண்டிங்கில் ராஷ்மிகா இன்டர்வியூ: தமிழில் பொன்னுமணி என்ற படத்தின்மூலம் அறிமுகமான நடிகை சவுந்தர்யா, தன்னுடைய அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா என நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் இவர் உயிரிழந்த நிலையில் இவரது பயோபிக் குறித்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ராஷ்மிகா, சவுந்தர்யாவின் பயோபிக் குறித்து தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். தற்போது அந்த தகவல்கள் ட்ரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











