நயன்தாரா, சமந்தாவை தொடர்ந்து.. பிசினஸ்வுமனாக மாறிய ராஷ்மிகா மந்தனா!
சென்னை: 'நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவையும் தொட்டதில் இருந்து 'பான் இந்தியா ஸ்டார்' ஆக மாறி போயிருக்கிறார். படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், சொந்தமாக தொழில் தொடங்கி தொழிலதிபராக மாற உள்ளார்.
கிரிக்பார்ட்டி' என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகையாக மாறினார். அந்த படத்தை பல தெலுங்கு படத்தில் நடித்து பெயர் எடுத்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படங்களில் அறிமுகமானவர், அதன் பின் 'வாரிசு' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷூடன் இணைந்து குபேரா படத்தில் நடித்தார். பான் இந்திய திரைப்படமான இப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து 'தி கேர்ள்பிரண்ட்' மற்றும் இந்தியில் 'தாமா' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா: படத்தில் பிசியான நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கட்டமாக தொழிலில் முதலீடு செய்ய முடிவு எடுத்திருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவரது அம்மாவிற்கு வீடியோ கால் மூலம் தெரிவித்ததை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இன்று நான் ஒரு மிக முக்கியமான படப்பிடிப்பிற்கு செல்கிறேன். நீங்கள் சொன்னது போல் தொழிலை நான் தொடங்குவேன் என கூறியிருக்கிறார்.இதற்கு அவரின் தாயார் சுமன் மந்தனா வாழ்த்து தெரிவித்துள்ளார். திரை உலகில் முன்னணி பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
தொழிலதிபரானார்: நடிகை நயன்தாரா, "தி லிப் பாம் கம்பெனி" என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கியுள்ளார். இது தவிர, ரவுடி பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடத்தி வருகிறார். அதே போல நடிகை சமந்தா, சாகீ என்ற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கி, "சுபம்" என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்தார். நகைச்சுவைத் திரைப்படமான இப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. நயன்தாரா, சமந்தா வரிசையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவும் தொழிலதிபராக உள்ளார்.


Click it and Unblock the Notifications











