Actress Rathi: ரஜினி -கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை.. மகனுடன் வெளியிட்ட கியூட் புகைப்படம்!
சென்னை: நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரதி.
இயக்குநர் பாரதிராஜாவின் டைரக்ஷனில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின்மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார்.
தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரதி: நடிகை ரதி இயக்குநர் பாரதிராஜாவின் டைரக்ஷனில் வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தின்மூலம் தமிழில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தவர். தொடர்ந்து ரஜினி, கமல், பாக்கியராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு, நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள் என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

80களின் கனவுக்கன்னி: 80ல்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ரதி, தன்னுடைய 16 வயதிலேயே புதிய வார்ப்புகள் படத்தில் அறிமுகமானார். தன்னுடைய 10வது வயதிலேயே இவர் மாடலிங்கில் ஈடுபட்டதாகவும் அதன்மூலம் கிடைத்த சினிமா வாய்ப்பை அடுத்தே முன்னணி நடிகையாக தமிழில் மாறியதாகவும் கூறப்படுகிறது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்த ரதி: தமிழில் இவர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்த ரதி, தமிழில் குறைந்த அளவிலேயே நடித்துள்ளார். இருந்தபோதிலும் இதுவரை மற்ற மொழிப்படங்களையும் சேர்த்து 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் இவரை காண முடிந்தது. ஆனால் கடந்த 2016ம் ஆண்டுவரை நடித்துவந்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தன்னுடைய குடும்பத்தினருடன் அதிகமான நேரங்களை செலவழிக்கத் துவங்கினார்.
தமிழில் குறைவான படங்கள்: இவருக்கு தமிழை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தியில் அதிகமான படவாய்ப்புகள் கிடைத்த நிலையில், அவற்றில் அதிகமான கவனத்தை செலுத்தினார். இதனிடையே கடந்த 1985ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார் ரதி. அனில் விர்வானி என்ற தொழிலதிபரை இவர் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். தன்னுடைய மகனை கவனித்துக் கொள்வதற்காகவே சினிமாவில் நடிப்பதை இவர் குறைத்துக் கொண்டார்.
ரதியின் சமீபத்திய புகைப்படங்கள்: 16 வயதிலேயே தான் நடிக்க துவங்கினாலும் தன்னுடைய தந்தை தனக்கு 23 வயதிலேயே திருமணம் செய்து வைக்க விரும்பியதாகவும் தனக்கும் அது திருமணத்திற்கு சரியான வயது என்று தோன்றியதால் தான் திருமணத்திற்கு சம்மதித்தாகவும் தனது பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். இவர் பாலிவுட்டில் அமிதாப், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே இவர் தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தன்னுடைய அழகான ஸ்டைல் மற்றும் கவர்சசியால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த ரதியா இது என்று ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை பார்த்து ஷாக்காகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











