Raveena Daha: காலை நீட்டி, கையை தூக்கி.. ஸ்டைல் லுக்கில் ரவீனா தாஹா!

சென்னை: ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ரவீனா தாஹா. பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், இணையத்தில் படு ஆக்டிவாக உள்ளார். தற்போது அவர், கருப்பு உடையில் பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ரவீனா தாஹா, ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதன் பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை இருந்தார்.

Raveena Daha photos
Photo Credit:

நடிகை ரவீனா தாஹா: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சிந்து பைரவி சீரியலில் ரவீனா கமிட்டாகி இருந்தார். இந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகி தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை ரவீனா, அந்த சீரியலில் இருந்து விலகினார். இதன் காரணமாக, சீரியல் தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் நடிகை ரவீனா மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு, ஒருவருடத்திற்கு எந்த சீரியலிலும் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது என்ன ஸ்டைல்: சீரியலில் தலைகாட்டாமல் இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார். இவரின் ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறது. தற்போது, கருப்பு உடையில், ஸ்டைலாக டயர்களுக்கு நடுவே அமர்ந்து இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஸ்டைல், ரவி லெவல் அப்டேட் என்று ரசிகர்கள் குவித்து வரும் கமெண்ட்கள் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றன. சீரியலில் காண முடியாமல் இருந்தாலும், ரவீனாவின் ஸ்டைல் அப்டேட்கள் மட்டும் ரசிகர்களின் டைம் லைனில் தொடர்ந்து ஓவர் டேக் செய்துகொண்டே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X