டிசைனர் மோஹித்துக்காக மணப்பெண்ணான நடிகை ரவீணா டாண்டன்
மும்பை: நடிகை ரவீனா டாண்டன் மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோவில் மணப் பெண் போன்று அழகாக உடை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.
நடிகை ரவீனா டாண்டன் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிப்பபதை குறைத்துவிட்டார். அதே சமயம் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.

மோஹித் பலோத்
ஆடை வடிவமைப்பாளர் மோஹித் பலோத் மணப் பெண்களுக்காக வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடல்கள் ராம்ப் வாக் செய்தனர்.

ரவீணா
மோஹித் வடிவமைத்த ஆடையை அணிந்து நடிகை ரவீணா டாண்டன் ராம்ப் வாக் செய்தார்.

ஷோ ஸ்டாப்பர்
இரண்டு குழந்தைகளுக்கு தாயானாலும் ரவீணா அந்த ஆடையில் அம்சமாகத் தான் இருந்தார். அவர் தான் ஷோ ஸ்டாப்பர்.

பாம்பே வெல்வட்
அனுராக் கஷ்யப் இயக்கியுள்ள பாம்பே வெல்வெட் படத்தில் ரவீணா டாண்டன் நடித்துள்ளார். இந்த படம் 2015ம் ஆண்டில் ரிலீஸாகும். அவர் சிம்ப்ளி பாத்தே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











