90's ரீயூனியனில் அட்டனன்ஸ் போட்ட நடிகைகள்.. மீனா டூ ரீமாசென் வரை.. செம லூட்டிதான் போலயே!
சென்னை: நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே கடந்த சில நாட்களாக தனது சினிமா நண்பர்களுடன் செம ஜாலியாக நேரத்தைக் கழித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள்தான். குறிப்பாக தனது சம கால நடிகைகளுடன் அவர் செம க்யூட்டாக ரீல்ஸ் எல்லாம் பதிவிட்டிருந்தார். இந்த ரீ யூனியனில் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் போன்ற பல இயக்குநர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நடிகை ரீமாசென் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டுப் போனவர் ரீமாசென். அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டு பக்கம் தலை வைத்து கூட பார்க்கவில்லை. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் 90'ஸ் நடிகைகள் ரீ யூனியன் மீட்டிங்கில் கலந்து கொண்டது பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

நடிகைகள் ரீ யூனியன்: சில தினங்களுக்கு முன்னர் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90ஸ் ரீயூனியன் என கேப்ஷனிட்டு சில புகைப் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த புகைப்படங்களில் நடிகைகள் சிம்ரன், சங்கீதா, சங்கவி, மகேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அதேபோல் இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகர் ஜக்கு பாய், நடன இயக்குநர் மற்றும் நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
ரீமா சென்: இந்நிலையில் நடிகை ரீமா சென் இந்த ரீ யூனியனில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், தலைவி வந்துட்டீங்களா.. எப்படி இருக்கீங்க? தமிழ் படங்களில் தொடர்ந்து நடிங்க, ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்துல நீங்க இருக்கீங்க தானே என்று கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள். இப்போது ரீமாசென் குறித்த பேச்சு இணையதள வாசிகள் மத்தியில் அதிகம் உலா வருகிறது. மேலும் இவர்களின் புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் அடிக்கடி இப்படி மீட்டிங்கைப் போட்டு செம லூட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்களே எனவும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











