Reema sen: ரீமா சென்னின் முதல் காதல்.. அட சுவாரஸ்யமா இருக்கே!
சென்னை: நடிகை ரீமா சென் மின்னலே படத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து வசீகரா என்ற பாடலில் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறிய ரீமா சென். தொடர்ந்து தில். தூள். வல்லவன். ஆயிரத்தில் ஒருவன் என அதிரடியாக அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்தவர்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலான ரீமாசென், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.

நடிகை ரீமா சென்: நடிகை ரீமா சென் மின்னலே படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து விக்ரம், சிம்பு, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தில், தூள், வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவந்தார். தமிழில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் அனைத்து படங்களும் இவரை ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைக்கும்படியான கேரக்டர்களில் அமைந்திருந்தன. இந்நிலையில் திருமணம் ஆகி செட்டிலான ரீமா சென் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
ரீமா சென் இன்டர்வியூ: இந்நிலையில் ரீமா சென் சமீபத்தில் யூடியூப்பிற்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசியுள்ளார். சிம்புவின் வல்லவன் படத்தில் இவர் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். பள்ளி இன்டர் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் தான் முதன் முதலில் சிம்பு மற்றும் ரீமா சென் சந்திப்பு நடக்கும். இருவரும் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும் அந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். அதையடுத்து இருவருக்கும் பிரேக் அப் ஆகி அவர் வில்லியாக மாறுவது தனி கதை. இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய youtube பேட்டியில் ரீமா சென் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசியுள்ளார்.
வல்லவன் பட பாணியில் காதல்: வல்லவன் படத்தைப் போலவே நிகழ்ச்சி ஒன்றில் ஒரு மாணவனை சந்தித்தாகவும் அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் இதனால் அவரை மிகவும் பிடித்ததாகவும் ரீமா சென் தெரிவித்துள்ளார். அவரது தோற்றத்தை தான் இன்றும் மறக்கவில்லை என்றும் ரீமா சென் தன்னுடைய பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அவரது இந்த பேட்டி சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது. தற்போது சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் ரீமா சென்.
ரீமா சென் திருமணம்: ரீமா சென் குறிப்பிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார். கடந்த 2012ம் ஆண்டில் சிவ கரண் சிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு சினிமாவைவிட்டு விலகி விட்டார். அவர் கடைசியாக தமிழில் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிக்கவில்லை. தற்போது அவர் தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











