முதல் நாள் படப்பிடிப்பிலே இவ்வளவு நெருக்கமா... அருண்விஜய் யோகக்காரர்தான்!
சென்னை : கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் பாப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இப்பொழுது அருண்விஜய்யுடன் இணைந்து நெருக்கமாக பக்கா போஸ் கொடுத்துள்ளார்.
தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் ரெஜினா வர வர திரைப்படங்களில் ஓவர் கிளாமர் காட்டி வருகிறார்.
குற்றம் 23 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் நெருக்கமாக இருவரும் இருக்கும் புகைப்படம் இப்பொழுது செம்ம வைரலாகி வருகிறது.

பிரபலமான நடிகையாக
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய ரெஜினா கஸன்ட்ரா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா
கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் என சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் வந்து சென்ற ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு முழு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழில் மட்டுமே அரை டஜன்
அதன் பின் தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வர தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட ரெஜினா சைடு கேப்பில் தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் இப்பொழுது தமிழில் மட்டுமே அரை டஜன் திரைப்படங்களுடன் அதுவும் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அருண் விஜய்க்கு ஜோடியாக
நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா என அடுத்தடுத்து ரெஜினாவின் நடிப்பில் உருவாகி உள்ள பிரபலமான திரைப்படங்கள் வெளியாக இருக்கும் இப்பொழுது "குற்றம் 23" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரெஜினா அதுவும் அருண்விஜய்க்கு ஜோடியாக.

சூப்பர்ஹிட் திரைப்படத்தை
படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அருண் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்ட ரெஜினா அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த நெருக்கமான புகைப்படம் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வர, ஏற்கனவே அறிவழகன் உடன் இணைந்து அருண்விஜய் குற்றம் 23 என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கும் நிலையில் மீண்டும் அருண் விஜய்க்கு அடித்தது யோகம் என பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











