ரெஜினாவின்.. த்ரில்லர் மூவி.. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்

சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகை ரெஜினா கசண்ட்ரா புதிய படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். ஆப்பிள் ட்ரீ ஸ்டியோஸ் தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கசண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 13ந் தேதி தொடங்க உள்ளது.

Actress Regina Cassandra has signed on for the new film.

இப்படம் குறித்து ராஜ் சேகர் வர்மா சில தகவல்களை கூறினார். ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்படாத தளத்தில் வித்தியாசமான முறையில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது.

Actress Regina Cassandra has signed on for the new film.

சமீப காலமாக பெண்களை மையமாக கொண்டு, நல்ல அழுத்தமாக கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் திரையில் ஜெயித்து வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் ட்ரீ ஸ்டியோஸின் முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Actress Regina Cassandra has signed on for the new film.

கார்த்திக் ராஜு கதை சொன்னதுமே இந்த கதாப்பாத்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன். அவருடம் கதை சொன்னோம் அவரும் கதை பிடித்து என்றார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாப்பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் இப்படத்திலும் தன் திறமையை நிரூபிப்பார்.

Actress Regina Cassandra has signed on for the new film.

கதாப்பாத்திரத்தின் மீது அவர் காட்டும் ஈடுபாடும் அதற்கு அவர் செய்துகொள்ளும் முன் தயாரிப்புகளும் திரைப்படத்தின் மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படத்தை திரையில் பார்க்கும் போது நீங்களும் அதை காணலாம். இத்திரைப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

Actress Regina Cassandra has signed on for the new film.

இத்திரைப்படத்திற்கு ப்ரொடக்சன் நம்பர் 1 என தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் துவங்கவுள்ளதாகவும், படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட உள்ளதாகவும் படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும் என்றார் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா.

Actress Regina Cassandra has signed on for the new film.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X