விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி வெப்சீரிஸில் இணைந்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா!

சென்னை : நடிகர் விஜய்சேதுபதி தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸில்களில் நடித்து வருகிறார்.

இந்த வகையில் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் & டி.கே. இயக்கத்தில் தற்போது ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப்சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள இந்த வெப்சீரிஸில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க நடிகை ரெஜினா கெஸன்ட்ரா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 வில்லன் வேடம்

வில்லன் வேடம்

விஜய் சேதுபதியின் ஒவ்வொரு திரைப்படங்களும் இப்போது பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் குணசித்திர வேடம் மற்றும் சிறப்புத் தோற்றம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து திரைப்படங்களிலும் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது மொழிகளை கடந்து பல மொழிகளிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

 இந்தி வெப்சீரிஸ்

இந்தி வெப்சீரிஸ்

அந்த வகையில் இப்போது ஹிந்தி பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது . தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டி.கே. இயக்கத்தில் தற்போது ஷாகித் கபூர் புதிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதில் ஷாகித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த வெப்சீரிஸ் ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகிறது என கூறப்பட்டது.

 ஷாஹித்தின் தாத்தாவாக

ஷாஹித்தின் தாத்தாவாக

இந்த படத்தில் ஏற்கனவே நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இமைக்கா நொடிகள், சங்க தமிழன்,துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து ராஷி கண்ணா மீண்டும் இந்த வெப் சீரியஸில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கின்றார் .தேசிய விருது பெற்ற நடிகர் அமோல் பலேகர் இந்த சீரிஸில் ஷாஹித்தின் தாத்தாவாக நடிக்கிறார்.

Recommended Video

அம்மாவ ஏமாத்த தான் சினிமாவுக்கு வந்தேன் | Vijay Antony speech | Kodiyil oruvan | Filmibeat Tamil
 ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார்

ரெஜினா கெஸன்ட்ரா இணைந்துள்ளார்

விரைவில் மும்பையில் தொடங்கப்பட உள்ள இந்த வெப்சீரிஸில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க நடிகை ரெஜினா கெஸன்ட்ரா தற்பொழுது ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பில் ரெஜினா கெஸன்ட்ரா கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X