நீங்க ரெஜினா கெஸன்ட்ரா... கும்ஃபூ கெஸன்ட்ரா.. பங்கமாக கலாய்த்த பிரபல இளம் நடிகர்!
சென்னை : பாப்பாவாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இப்பொழுது கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.
குற்றம் 23 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் ரெஜினா நடித்து வர படப்பிடிப்பில் அருண் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தார்.
இந்த நிலையில் இப்பொழுது மிடுக்கான உடையில் ஆக்சன் போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்த இளம் நடிகர் ஒருவர் கலாய்த்து உள்ளார்.

பாப்பா கதாபாத்திரத்தில்
கண்ட நாள் முதல், அழகிய அசுரா போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா சிவகார்த்திகேயன் விமல் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலம் பாப்பா கதாபாத்திரத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

முயன்ற அளவு கவர்ச்சி
ஆரம்பத்தில் அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டி வரும் நிலையில் இயக்குனர்கள் பலரும் தங்களது திரைப்படங்களில் முயன்ற அளவு கவர்ச்சி காட்டுமாறு கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சக்ரா
" எம்புட்டு இருக்குது ஆசை" பாடலில் கவர்ச்சி ததும்ப ததும்ப நடித்து ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த நடிகை ரெஜினா கெஸன்ட்ரா அதைப் போலவே தெலுங்கிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வரும் நிலையில் இப்பொழுது விஷாலின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் சக்ரா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர்
குற்றம் 23 என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்திற்கு பிறகு அறிவழகன் மற்றும் அருண்விஜய் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அப்போது அருண் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக ரெஜினா எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதை அடுத்து செம வைரலானது.

கும்ஃபூ கெஸன்ட்ரா
இந்த நிலையில் இப்பொழுது மிடுக்கான உடையில் ஆக்சன் ஹீரோயினி போல ஒருபக்க காலை மட்டும் நீட்டிக் கொண்டு டிப்ரண்டான போஸ் கொடுத்திருக்கும் ரெஜினாவின் இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில் பிரபல இளம் நடிகரான சுதீப் கிஷான் கும்ஃபூ கெஸன்ட்ரா என கலாய்த்துள்ளார். மேலும் ஒரு சில குறும்பு பிடித்து நெட்டிசன்கள் கக்கூஸ் போற மாதிரி போஸா இருக்கே என சற்று விவகாரமாகவும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











