Regina Cassandra : ரெஜினா கசாண்ட்ரா அணிந்திருந்த ஆடையின் விலை இத்தனை லட்சமா?

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தன் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவரும் நடிகையாக இருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இணையத்தில் அப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அணிந்து இருக்கும் புதிய போட்டோ இணையத்தில் வெளியாகி அந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்துள்ளது.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பிறந்தார். இவர், பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன்பின், பிரசன்னா மற்றும் லைலா நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பின், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர், சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

regina cassandra dress
Photo Credit:

நடிகை ரெஜினா கசாண்ட்ரா: தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், பஞ்சாமிர்தம், சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, ரோடீன் லவ் ஸ்டோரி, ராஜதந்திரம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தெலுங்கில் மட்டுமே நடித்து வந்த ரெஜினா, இந்தி, கன்னட திரைப்படங்களில் நடித்தார். இவர், கடைசியாக அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது, ரெஜினா கசாண்ட்ரா மூக்குத்தி அம்மன் 2, செக்சன் 108 படத்திலும், இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் 'தி வைவ்ஸ்' படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

உச்சுகொட்ட வைத்த உடை: தற்போது ரெஜினா கசாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராமில் லெகங்கா ஆடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அந்த உடைக்கு ஏற்றார் போல லைட் மேக்கப் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த உடையில் விலை சுமார் ரூ. 74,200 மதிப்பு உடையது என்பது தெரியவந்துள்ளது. பிராலெட்டுடன், பட்டர் கிரேப் லைனிங் கொண்ட ஸ்கர்ட் மற்றும் சீக்வின் ஒம்ப்ரே துப்பட்டாவுடன் சேர்த்து இந்த அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X