Regina cassandra: அஜித்தை எல்லோரும் பார்க்கனும்.. அப்படியொரு வசீகரம்.. விடாமுயற்சி பட நடிகை உற்சாகம்
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து அடுத்தடுத்த போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தில் இணைந்துள்ள ரெஜினா கசாண்ட்ரா அஜித் குறித்தும் அவரது வசீகரம் குறித்தும் முதல்முறையாக பேசியுள்ளார். இந்தப் படத்தின் 90 சதவிகித சூட்டிங் அசர்பைஜானில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் அனுபவத்தையும் ரெஜினா பகிர்ந்துள்ளார். படம் பொங்கல் ரிலீசாக அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார்/ அவரது விடாமுயற்சி படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதன் சூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக ஒரே மூச்சில் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்பெயின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பும் படக்குழுவினர் சில பேட்ச் வேலைகளை மட்டும் திட்டமிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு அஜித் பிறந்தநாளையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படம்: இதனிடையே, ரோடு திரில்லர் மூவியாக உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தில் அவருடன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் தான் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து முதல்முறையாக ரெஜினா கசாண்ட்ரா மனம் திறந்து பேசியுள்ளார். இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் இயக்குநர் மகிழ் திருமேனி உருவாக்கியுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக அஜித்திடம் பேசி பழகியதில்லை என்று கூறியுள்ளார்.
அஜித் குறித்து ரெஜினா பாராட்டு: தொடர்ந்து பேசிய ரெஜினா, அஜித்தை அனைவரும் சந்தித்து பேச வேண்டும் என்றும் அந்த அளவுக்கு வசீகரம் நிறைந்தவர் அஜித்குமார் என்றும் கூறியுள்ளார். இதை தான் யாரிடமும் முன்னதாக பார்த்ததில்லை என்றும் பாராட்டியுள்ளார். விடாமுயற்சி படத்தில் தன்னுடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கேரக்டர் தனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் ரெஜினா கூறியுள்ளார். இந்த படத்தில் அவர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அர்ஜுன் படத்தின் வில்லனாக நடித்துள்ள நிலையில் இரண்டாவது வில்லனாக ஆரவ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் ரிலீஸ்?: சாலையில் காரில் பயணிக்கும்படியான ஆரவ் மற்றும் அஜித்தின் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி மாஸ் காட்டின. படம் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூட்டிங் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போயுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











