நடிகை ரெஜினா கசாண்ட்ராவிற்கு விரைவில் டும் டும் டும்.. இணையத்தில் பரவும் தகவல்!

சென்னை: தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. படங்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது.

ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரெஜினா கசாண்ட்ரா. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

Actress Regina Cassandra ready for the marriage

அதன் பின் பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருந்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் போன்ற திரைப்படத்தில் நடித்த இவர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா இந்த படத்திற்கு பின் இவர் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார்.

விடாமுயற்சி படத்தில்: தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், ரெஜினா தனது அஜர்பைஜானில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, விடாமுயற்சி படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார்.

Actress Regina Cassandra ready for the marriage

கைவசம் உள்ள படம்: கதாநாயகி, வில்லி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டும் ரெஜினா, வித்தியாசமான கதைகளில் நடிப்பதையே பெரிதும் விரும்பக்கூடிய நடிகையாக இருக்கிறார். தற்போது, ரெஜினா கசாண்ட்ராவின் கைவசம், சூர்ப்பனகை , பிளாஷ்பேக், பார்டர், செக்ஸன் 108 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

Actress Regina Cassandra ready for the marriage

விரைவில் திருமணம்: 33 வயதான நடிகை ரெஜினா கசாண்ட்ராக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதன்படி ரெஜினா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து ரெஜினா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கிட்டத்தட்ட இந்த திருமண தகவல் உறுதியானது என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Actress Regina Cassandra ready for the marriage

காதல் கிசுகிசு: நடிகர் சந்தீப், ரெஜினாவின் பிறந்த நாளில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, "ஹாப்பி பர்த்டே பாப்பா... லவ் யூ நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன் என்று வாழ்த்து கூறியிருந்தார். இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்து கொண்டு இருப்பதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் செய்தி பரவியது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா, சந்தீப் என் நண்பர் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X