நடுக்கடலில் மெய்மறந்து மல்லாக்க நீச்சல்… ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்ட வைரல் பிக்ஸ்!
சென்னை : கவர்ச்சிக்கன்னி ரெஜினா கசாண்ட்ரா நடுக் கடலில் நீச்சல் உடையில் மெய்மறந்து படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி மற்றும் விஷாலுடன் இணைந்து சக்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார்.
திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக பக்கங்களிலும் தன்னுடைய வித்யாசமான புகைப்படங்களை பல்வேறு விதமாக கவர்ச்சி காட்டியவாறு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படம் ஒன்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக கவர்ச்சியில்
தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், அழகிய அசுரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து கன்னடா, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் ரெஜினா சமீபகாலமாக கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார்.

ஜொலிக்க ஆரம்பித்தார்
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் இவரின் பாப்பா கதாபாத்திரம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த ரெஜினா, அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், எழில் இயக்கத்தில் சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

எம்புட்டு இருக்குது ஆச
தமிழில் நடித்து வரும் அதேவேளையில் தெலுங்கில் இவர் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தனது கவர்ச்சி கலந்த நடிப்பின் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து வந்த இவர், "சரவணன் இருக்க பயமேன்" திரைப்படத்தில் வரும் " எம்புட்டு இருக்குது ஆச" என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக உருவெடுத்தார்.

கவர்ச்சிக்கு முக்கியத்துவம்
இதற்கு முன் தமிழில் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரெஜினா " எம்புட்டு இருக்குது ஆச "பாடலில், இதுவரை தமிழ் ரசிகர்கள் காணாத எக்கச்சக்க கவர்ச்சியைக் காட்டி அனைவரையும் மிரள வைத்தார். அதன்பின் நடித்த பல படங்களில் இவர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி மற்றும் விஷால் நடிப்பில் உருவாகிவரும் சக்ரா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

மல்லாக்கப் படுத்துக் கொண்டு
திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்புடன் கவர்ச்சியையும் காட்டிவரும் ரெஜினா தற்பொழுது சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் நீச்சலுடையில் நடுக்கடலில் கவர்ச்சி ததும்பத் ததும்ப மல்லாக்கப் படுத்துக் கொண்டு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்டு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











